Spread the love

மாநாடு 15 June 2025

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு மேட்டூரில் தண்ணீர் திறப்பிற்கு தஞ்சாவூர் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்க வேண்டும், நிபந்தனை இன்றி கடன் வழங்க வேண்டும்

தூர்வாராத பகுதிகளை முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக மேட்டூர் அணையை தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதற்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பும் – மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, விவசாயிகள் கடன்

வாங்குவதற்கு சிபில் ஸ்கோர் பார்ப்பதை கைவிட்டு, நிபந்தனை இன்றி அனைத்து விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். குறுவை தொகுப்பு திட்டம், இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே அந்த நடைமுறை ரத்து செய்து அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும். தற்போது விதை நெல் விலை உயர்ந்துள்ளது. எனவே அதை கட்டுப்படுத்தி கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி விதைநெல் வழங்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் விவசாய கேட்கும் நெல் ரகங்கள் கிடைப்பதில்லை. எனவே விவசாயம் கேட்கும் நெல் ரகங்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்வேறு பகுதிகளில் கிளை வாய்க்கால்கள், ஆறுகள் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் ஆறுகள் , கிளைவாய்க்கால்களை தூர்வார வேண்டும். அப்போதுதான் விளைநிலங்களுக்கு தண்ணீர் தடை இன்றி வந்து சேரும் என விவசாயிகள் தெரிவித்துனர்.

செய்தி – N.செந்தில் குமார்

81910cookie-checkமுதல்வர் தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி, தூர் வாராத பகுதிகளையும் நேரில் பார்வையிடுங்கள் கோரிக்கை

Leave a Reply

error: Content is protected !!