மாநாடு 06 July 2024
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பலரும் தங்களது இரங்கலையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள் அதன்படி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வெங்கடேச மாணிக்கம் கீழ்க்கண்டவாறு கண்டன அறிக்கை தெரிவித்திருக்கிறார்:
தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை செய்யப்பட்டதை தேசியவாத காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிகிறது.
ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது
மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது , இது போன்ற படுகொலை நடைபெறுவது தமிழக அரசின் ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிக்கிகிறது
அவரை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
வெங்கடேச மாணிக்கம்
தேசிய ஒருங்கிணைப்பாளர், ( OBC CELL)
தேசியவாத காங்கிரஸ் கட்சி