Spread the love

பள்ளிகளை திறந்தால் அரசு இதை செய்ய வேண்டும்

பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில்கொண்டு மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது தற்போது பாதிப்பு மெல்ல குறைந்து வந்தாலும் பெரியளவில் குறையவில்லை. நாள் ஒன்றுக்கு 28 ஆயிரம் என்ற அளவில் பாதிப்பு பதிவாகி வருகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் பொதுத் தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

தமிழக அரசு அரசு அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதேவேளையில் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. எனவே சுழற்சி முறை வகுப்புகளை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நலக் கூட்டமைப்பின் தலைவர் அருணன் வரும் பிப்ரவரி 1ந்தேதி முதல் பள்ளி திறப்பது வரவேற்கக்கூடிய அறிவிப்பு என்றாலும், வகுப்பறை பற்றாக்குறை உள்ளதை நினைவில்கொள்ள வேண்டும். கூடுதலாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது சிரமம். எனவே, சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவதற்கு அரசு உத்தரவிட வேண்டும். குறிப்பாக இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

12020cookie-checkஇதை கட்டாயம் அரசு செய்ய வேண்டும் அருணன் அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!