Spread the love

மாநாடு 5 March 2022

தமிழ்நாட்டை உலுக்கிய பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட நிலையில், மீட்கப்பட்டார். இந்த வழக்கில் யுவராஜ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

கடந்த 2019 மே 5 முதல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக 116 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இறுதி விசாரணை பிப்.9ல் நிறைவுபெற்ற நிலையில், கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், கோகுல்ராஜ் ஆணவ படுகொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை விவரம் குறித்து 8ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரில் 2 பேர் இறந்த நிலையில், 5 பேரை விடுதலை செய்து நீதிபதி சம்பத்குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார். மீதமுள்ள தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

22830cookie-checkகோகுல்ராஜ் கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Leave a Reply

error: Content is protected !!