Spread the love

மாநாடு 29 March 2022

கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று படிக்க முடியாதவர்கள் தொலைதூரக்கல்வியில் பயின்று வெற்றி பெற்று அனைத்து பணிகளுக்கும் சென்றனர். இவ்வாறான தொலைதூரக் கல்வியில் வேலையில் இருப்பவர்கள் கூட மேற்படிப்பு முடித்து பட்டம் பெற்று பதவி உயர்வுகள் பெற்றனர். அனைத்து வேலைகளிலும் சேர்ந்தனர். இவ்வாறாக பல வசதிகளைக் கொண்ட தொலைதூரக் கல்வியை இந்த பல்கலைக்கழகத்திலிருந்து படித்து பட்டம் பெற்றோர்களின் சான்றிதழ் இனி செல்லாது என்று யுஜிசி அறிவித்துள்ளது .

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது. அண்ணாமலை பல்.கழகத்திற்கு கடந்த 2014-15 ஆண்டு வரை மட்டுமே தொலைதூர படிப்புகளுக்கான வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என யுஜிசி தெரிவித்துள்ளது.

அதன்பின்னர்,சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது.இதனால்,அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல எனவும், வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சிதம்பரம் பல்.கழகமே பொறுப்பு எனவும் யுஜிசி தெரிவித்துள்ளது

27660cookie-checkஇந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தால் இனி செல்லாது யுஜிசி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!