Spread the love

மாநாடு 27 April 2022

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமம் உள்ளது அங்கு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி நேற்று இரவு தேர் வீதிகளில் உலா வந்திருக்கிறது.

அப்போது 3 மணியளவில் திடீரென உயர் அழுத்த மின்சார கம்பி தேரில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து இரண்டு சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் தெரிய வருகிறது. படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடைபெறும் இந்த திருவிழாவில் உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் 11பேர் பலியானதால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.

இந்த துயர சம்பவத்தை பற்றி வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான நல்லதுரை கூறியதாவது:

இறந்தோருக்கு எனது கண்ணீரஞ்சலி
இழந்தோருக்கு எனது இதயபூர்வ ஆறுதல்கள்

ஒற்றை நொடியில் முடிந்து போனது 11 உயிர்கள்

கோலாகலமாக ஊர்வலம் புறப்பட்ட அப்பர் அடிகள்
கண்ணீரோடு நிற்கிறார்
தன் பிள்ளைகளுக்காக

மனம் பதைக்கிறது…
ஆறுதலடைய மறுக்கிறது
இதுபோன்ற விபத்துகளில் இன்னும் எத்தனை உயிர்களை பலியிடப்போகிறோம்

பெரிய விழாக்கள், நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு ஒழுங்குகளை கவனிக்கும் அரசு இயந்திரம், இதுபோன்ற கவனம் பெறாத நிகழ்ச்சிகளை கவனிப்பது இல்லை

சாவுகளில் இருந்து தான் நாம் பாடம் படிக்கிறோம்

இனியாவது
ஒரு விதி செய் அரசே
இதுபோன்ற நிகழ்வுகளுக்கான பொது விதிகளையும், வழிகாட்டுதல்களையும் வரைவு செய்யுங்கள்
அதனை கடுமையாக அமுல் படுத்துங்கள்…
விபத்தில்லா விழாக்கள் நடக்கட்டும் என்றார்.

வீடியோ லிங்க்:

https://youtu.be/yD5K8CyvOoM

32510cookie-checkதஞ்சையில் தேர் தீ விபத்து 11 பேர் பலி பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!