மாநாடு 14 July 2022
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன்பாக கடந்த 12ஆம் தேதி தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் தனக்கு உடல் சோர்வு இருந்ததாகவும் அதனை சோதித்த போது கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் கூறியவர் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் கொடுத்திருந்தார்.
சற்று முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சைக்காக காவேரி மருத்துமனைக்கு சென்ற நிலையில் அவரை கொரோனா சிகிச்சை கண்காணிப்புக்காக அனுமதித்துள்ளதாக காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா சிகிச்சை கண்காணிப்புகளுக்காக மருத்துவர்களின் அறிவுரைப்படி முதல்வர் ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.