மாநாடு 23 October 2022
தமிழ்நாடு குடிகாரர்கள் மாநிலமாக இருப்பதற்கும் ,ஆற்றில் மணல் திருட்டுப் போவதற்கும், கனிம வளங்கள் காவு போவதற்கும் ,தமிழ் மொழி பற்று தமிழர்களுக்கு குறைந்து போனதற்கும், இலவசம் என்கிற பேரில் கையேந்துவதை தமிழ்நாட்டு மக்கள் கௌரவமாக நினைப்பதற்கும், ,ஓட்டுக்கு காசு வாங்குவதை தனது உரிமை என்று மக்கள் நினைப்பதற்கும் ,தமிழ்நாட்டு அரசியல் இவ்வளவு கேடு கெட்டுப் போனதற்கு அடிப்படைக் காரணமே திமுக தான் என்று நன்கு அரசியல் தெரிந்தவர்கள் கூறுவதை மெய்ப்பிக்கும் வகையில் மற்றும் ஒரு கேவலம் தஞ்சாவூர் திமுகவில் ஆரம்பமாகி இருக்கிறது.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் தீபாவளி சமயங்களில் தற்காலிக கடைகள் அமைத்து அதில் வரும் வருமானத்தை மாநகராட்சி வசூல் செய்து வந்தது ,அதன் மூலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் வந்தது. காலங்காலமாக இந்த நடைமுறைதான் இருந்தது, இதையெல்லாம் தடுத்து தவிர்த்து விட்டு மாநகராட்சி வருவாய் மூலம் மக்களுக்கு பயன்பட வேண்டிய பணத்தை முழுவதுமாக தஞ்சாவூர் திமுகவினர் அனைவருக்கும் தெரியும்படி கொஞ்சம் கூட அச்சப்படாமல், அசிங்கம் என நினைக்காமல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் போடப்படும் தீபாவளி கடைகளில் இருந்து தலா ஒரு கடைக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 500 கடைகள் என்று கூறப்படுகிறது
அதன் கூட்டுத்தொகை ஏறக்குறைய 1 கோடி ரூபாய் என்று தெரிய வருகிறது, இந்த வருவாய் மாநகராட்சி மூலம் பெறப்பட்டு மக்களுக்கு பயன்பட வேண்டிய பணம், அவ்வாறான பணத்தை திமுகவினர் வசூல் செய்து அந்த பணத்தை கடந்த இரண்டு நாட்களாக பங்கு போட்டு பிரித்துக் கொள்கிறார்கள்.
இந்த அக்கப்போர் எல்லாம் எப்போது இருந்து தொடங்கப்பட்டது என்று கேட்டபோது தற்போது தஞ்சாவூர் திமுகவின் மாநகர செயலாளராகவும், தஞ்சாவூர் மண்ணையும் மக்களையும் காப்பதற்காக திமுகவால் மாநகர தந்தையாக சண்.ராமநாதன் அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றவுடன் தான் இந்த இழிநிலை தஞ்சாவூரில் ஆரம்பத்திருக்கிறது என்கிறார்கள் திமுகவின் உண்மை தொண்டர்கள்.
அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தை மாற்றி அரசியலுக்கு வந்தால் மக்களின் பணத்தை ஆட்டையை போட்டு அசால்டாக பவனி வரலாம் என்கின்ற போக்கை திமுக இந்த தீபாவளியில் இருந்து தஞ்சாவூரிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கட்சிகள் செய்கின்ற தவறை யாரும் கேள்வி கேட்கும் தகுதியில் இருக்கக் கூடாது என்பதற்காக தேர்தல் நேரங்களில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அதேபோல திமுக மேல்மட்ட பொறுப்பாளர்கள் செய்கின்ற தவறை சுட்டிக்காட்ட கூடாது என்பதற்காக மக்களிடம் இருந்து எடுத்த பணத்தை போட்டு அடுத்த மட்டத்தில் இருக்கின்ற திமுகவினருக்கு கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சாதாரணமாகவே மேல் மட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் சில தில்லுமுல்லுகளை செய்து கொண்டிருந்த போதே தமிழ்நாட்டில் பல ஆற்றில் மணல் இல்லை, பல இடங்களில் ஆறு இல்லை என்கிற நிலையில், இனி இவர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் திமுகவால் தமிழகம் என்ன பாடுபட போகிறது என்பதை மக்கள் அனைவரும் வரும் காலங்களில் காண தான் போகிறோம்.
ஊரான் வீட்டு நெய் என் பொண்டாட்டி கை என்கின்ற பழமொழிகளுக்கு ஏற்ப தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சேர வேண்டிய மக்கள் பணத்தில் யாருக்கு எவ்வளவு பிரிக்கப்பட்டது என்கின்ற விபரம் பின்வருமாறு : திமுக பகுதிச் செயலாளர்கள் ஒருவருக்கு 2லட்சம் என 4 பகுதிச் செயலாளர்களுக்கும் மொத்தம் 8 லட்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தஞ்சாவூர் மாநகர திமுக வார்டு செயலாளர்கள் 51 பேருக்கு தலா 25000 விதம் மொத்தம் 12 லட்சத்து 75 ஆயிரம் கொடுக்கப்பட்டிருக்கிறது,
மாநகர வார்டு தலைவர், செயலாளர், பொருளாளர் , பிரதிநிதி போன்ற நிர்வாகிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது,
வார்டு கவுன்சிலர்களுக்கு 10ஆயிரம் ரூபாய் சில கவுன்சிலர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது சராசரியாக 10 ஆயிரம் ரூபாய் என்கிற கணக்கின்படி கவுன்சிலர்களுக்கு மொத்தம் 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது,
பகுதி செயலாளர் ஒவ்வொருவருக்கும் 3 மாதத்திற்கு ஒரு முறை 2 லட்சம் விதம் 4 பேருக்கும் கொடுக்கப்பட இருக்கிறது என்பதும் ,இந்த பணம் எதுவும் திமுக தலைமையில் இருந்து கொடுக்கப்படாதது என்பதும், ஏதாவது ஒரு வகையில் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் மூலம் திரட்டப்பட்டு கொடுக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திமுகவினரை சமூக வலைத்தளங்களில் 200 ரூபாய் உ.பி என்று கலாய்ப்பார்கள், இந்நிலையில் இதுவும் சேர்ந்து விட்டதால், இனி முன்பு போல கரை வேட்டி கட்டிக்கொண்டு மக்களுக்கு அதை செய்தோம், இதை செய்தோம் என்று இனி திமுகவினர் வாய் சவுடால் விட முடியாது, ஏனெனில் திமுகவினர் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக ஆகிவிட்டார்கள் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்றவுடன் சரவணகுமார் மாநகராட்சிக்கு எந்தவித இழப்பும் ஏற்பட்டு விடக்கூடாது, மாநகராட்சியின் சிறு இடத்தைக் கூட யாரும் ஆக்கிரமித்து விட கூடாது என்பதற்காக, பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியவர், தற்போது தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் கடைகள் அமைத்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன என்பதையும் விரைவில் நமது மாநாடு இதழில் வெளியிடுவோம்.
இதன் மூலம் பார்க்கும் போது தமிழ்நாட்டின் அனைத்து கேடுகளுக்குமான ஆணிவேர் திமுக தான் என்று தெரிகிறது.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.