மாநாடு 01 November 2022
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கவிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது , ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை இந்த காலகட்டத்தில் தொடங்கிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.
அதன்படி நேற்றிலிருந்து தமிழ்நாட்டில் மழை பல்வேறு பகுதிகளில் மிதமாகவும் பல இடங்களில் கனமழையாகவும் பெய்து வருகிறது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து மழை பெய்து வருகிறது, அதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் மழைநீர் சாலைகளில் தேங்கி குளம் போல் நிற்கிறது இதனால் வாகன ஓட்டிகளும் , மக்களும் பெரிதும் அல்லல் படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது,
கடந்த பதினாறு மாதங்களாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது, தமிழ்நாட்டின் முதல்வராகவும் திமுகவின் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் இருந்த போதும் சென்னையில் பல இடங்கள் இன்னமும் பழைய நிலையில்தான் இருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள்.
நோய்த்தொற்று ஏற்படுத்தும் விதமாகவும், சாலை விபத்து ஏற்படுத்தும் விதமாகவும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள சில முக்கிய பகுதிகளில் அந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் கூறியதாவது: இந்த பகுதி பூவிருந்தவல்லி இங்கு தொழிற்பேட்டைகள் தனியார் மருத்துவக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, ரிங் ரோடு பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தை இணைக்கும் சாலை எந்த நிலையில் இருக்கிறது நீங்களே பாருங்கள் என்றார்கள் அந்த அவல நிலையை நாம் படம் பிடித்துக் கொண்டோம்.
அதனை அடுத்து வேலப்பன்சாவடி பகுதி மக்கள் கூறும்போது இந்தப் பகுதியில் மருத்துவமனைகள் தொழிற்சாலைகள் இருக்கின்றது அது மட்டுமல்லாமல் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 1500 பேருந்துகள் இந்த மார்க்கமாக இயக்கப்படும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரதான சாலை இது என்றார்கள்.
அதனைத் தொடர்ந்து மதுரவாயில் பகுதியில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்த பகுதியில் மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது இங்குதான் புகழ்பெற்ற எம்ஜிஆர் பல்கலைக்கழகம் இருக்கிறது, அதேபோல இந்தியாவின் தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியான சவிதா பல் மருத்துவக் கல்லூரி இங்கு தான் இருக்கிறது. இந்த பல் மருத்துவக் கல்லூரி
இந்தியாவில் இரண்டாவது இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தையும், கோயம்பேடு காய்கறி சந்தையையும் ,கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தையும் இணைக்கும் முக்கிய சாலை இது இந்த சாலையில் பல லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணம் செய்கிறார்கள். நிலை இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 50 விழுக்காடுக்கு மேல் நாங்கள் செய்து விட்டோம் என்று செய்திகளின் வாயிலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை அன்றாடம் அல்லல்பட்டு துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள் இந்நிலையை நீடித்தால் திமுக இனி இந்த தேர்தலையும் சந்தித்து வெற்றி பெற முடியாது என்கிறார்கள் நாம் சந்தித்த தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மக்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் சென்னையில் மழைநீர் வடிகால் பணி வேலை முடியாமல் இருந்த இடத்தில் விழுந்ததன் காரணமாக பரிதாபமாக இறந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இனி ஒரு நிலை அவ்வாறு யாருக்கும் நடக்காதவாறு தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு சென்னையில் தேங்கியிருக்கின்ற மழை நீரையும் சாலைகளில் உள்ள மேடு பள்ளங்களையும் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
குறையாக இருக்கின்ற சாலைகளை முதலில் தமிழ்நாட்டில் சரியாக போட்டுவிட்டு அடுத்ததாக எந்த புதிய சாலையையும் போடும் வேளையை தமிழக அரசு பார்க்க வேண்டும். மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும் .செயல்படுமா பொறுத்திருந்து பார்ப்போம்!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://www.binance.com/en-IN/register?ref=UM6SMJM3