Spread the love

மாநாடு 30 January 2023

திமுகவில் இதற்கு முன்பாக நன்கு மக்களால் அறியப்பட்டு, கட்சிக்காரர்களோடு ஒன்றி கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர்.

துரை சந்திரசேகர் போட்டியிட்ட 6 தேர்தல்களில் 4 தேர்தலில் வெற்றி பெற்றவர், தற்போது தஞ்சாவூர்  திமுகவின் மத்திய மாவட்டத்தின் செயலாளராகவும், இருக்கிறார்.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எல்லாராலும் அறியப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து திருவையாறு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராகவும் சிவாஜி கணேசனே போட்டியிட்டபோது அவரை எதிர்த்து போட்டியிட திமுகவின் சார்பில் அப்போது இளைஞராக இருந்த துரை. சந்திரசேகரை களம் இறக்கியது. திமுக தலைமை அந்த நேரத்தில் எல்லோருக்கும் அறிமுகமான சிவாஜி கணேசனை, பலராலும் அறியப்படாமல் இருக்கும் துரை.சந்திரசேகர் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது. அப்படி எழுதியவர்களின் எழுத்துக்களையும், கருதியவர்களின் கருத்துக்களையும் தூள் தூளாக்கும் விதமாக சிவாஜி கணேசனை விட 10,643 வாக்குகள் அதிகம் பெற்று திருவையாறு சட்டமன்ற உறுப்பினராகி திமுக தலைமையின் நற் மதிப்பை பெற்றார் துரை.சந்திரசேகர்.

திமுக தலைமையின் நம்பிக்கையையும் நற்மதிப்பையும் பெற்று வந்த துரை. சந்திரசேகருக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிட வாய்ப்புகள் கொடுக்கப்பட மாட்டார்கள் என்று பெருவாரியாக பேச்சு அடிபட்டு வந்தது, இருந்த போதும் திமுகவின் தற்போதைய தலைவர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் நடைபெற்ற தேர்தலிலும் துரை.சந்திரசேகர் வெற்றி பெற்று தற்போது திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருக்கிறார்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களில் இருந்தே தொடர்ந்து துரை. சந்திரசேகரின் மீது பொதுமக்களால் குறைகள் கூறப்பட்டு வருகிறது, திமுகவினரும் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வந்தது, ஏற்கனவே திருப்பந்துருத்தியில் உள்ள விளைநிலங்களை அழித்து சாலை போடும் பணிகளை மேற்கொண்ட போதும் மக்களுக்காக, மக்களோடு வந்து நின்று ஆறுதலாக கூட பேசவில்லை என்று திருப்பந்துருத்தி மக்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்,

இந்நிலையில் துரை.சந்திரசேகர் மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 2 ஊர்களில் திமுகவினர் திமுகவின் கொடியை இறக்கி தங்களது எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள். இச்சம்பவம் தஞ்சை மாவட்ட திமுகவில் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கு துரை.சந்திரசேகர் மீது ஏற்பட்ட அதிருப்தி, திமுக மீது மாறி இருப்பதை அவர்களிடம் நாம் பேசியது மூலம் அறிய முடிந்தது.

ஏன் இவ்வளவு அதிருப்தி உங்களுக்கு எதற்காக திமுகவின் கொடியை கொடிக்கம்பத்தில் இருந்து இறக்குனீர்கள் என்று பேசத் தொடங்கினோம். அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்கள்:

வருகிற மார்ச் மாதம் 1ஆம் தேதி திமுகவின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் வருகிறது, அதனை முன்னிட்டு திமுக இளைஞர் அணி கிளை கழகம் சார்பாக மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடுக்காவேரி கால்நடை மருத்துவமனையில் இருந்து தொடங்கி நடத்தப்படுவதற்கான அனைத்து வேலைகளிலும் கடந்த சில மாதத்துக்கு முன்பே இறங்கினோம்,

அது தொடர்பாக எங்களது சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரின் ஆலோசனைகளை பெற்று செயல்பட்டு வந்தோம் அதன்படி 30-12-2022 அன்று மாட்டு வண்டி பந்தயத்தை 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கான அனுமதியை தரக்கோரி திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்தோம், பெற்றுக் கொண்டவர் வாய்மொழியில் நடத்துவதற்கான அனுமதியை கொடுத்தார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து எங்களது சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரிடம் இந்த பந்தயத்திற்காக அடிக்கப்பட்ட நோட்டீஸ் கொடுத்தோம்,

அதனைத் தொடர்ந்து மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்கான அறிவிப்புகளும் செய்யப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது, பல ஊர்களில் இருந்தும் பந்தயத்தில் ஈடுபடும் மாடுகளும், மாட்டு வண்டிகளும் எங்களது ஊருக்கு வர தொடங்கின, இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் 12 மணி வாக்கில் நடுக்காவேரி காவல் நிலையத்தில் இருந்து வந்த காவலர் வெற்று காகிதத்தில் எங்களிடம் கையெழுத்து வாங்கி சென்று விட்டார்.

அதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட வேண்டிய மாட்டு வண்டி பந்தயம் நிறுத்தப்பட்டது எங்களுக்கு பெரும் மன உளைச்சலையும், தன்மானப் பிரச்சனையையும் உண்டாக்கி இருக்கிறது, இந்த நேரத்தில் திமுகவின் மத்திய மாவட்ட தலைவராக இருக்கின்ற துரை.சந்திரசேகர் எங்களிடம் நடந்து கொண்ட விதம் ஏற்புடையதாக இல்லை அதே போல நேற்று நாங்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டோம் அதையும் அவர் எடுக்காமல் இருந்தார். இதனால் எங்களுக்கு மிகுந்த மன உளைச்சல் உண்டாகி இருக்கிறது , அதன் வெளிப்பாடாகவே அம்பதுமேல் நகரத்திலும், அல்லூர் ஊராட்சியில் கிளைச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட ரேக்ளா சங்கப் பொருளாளர் ராசு கண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பெருவாரியான திமுகவினர், திமுகவின் கொடியை, கொடி கம்பத்தில் இருந்து இறக்கி எங்களது எதிர்ப்பை கட்சியின் தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம் என்றார்கள்.

மேலும் கூறுகையில் : ரேக்ளா சங்க மாநில தலைவர் எம். கண்ணன் உள்ளிட்டவர்களிடம் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவோம், மதுரை உயர்நீதிமன்றத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்துவதற்கான அனுமதியை பெற்று விரைவில் நாங்கள் பந்தயம் நடத்துவோம் என்றார்கள்.

ஒரு காலகட்டத்தில் கட்சியை வளர்த்து, ஜெயிக்க வைத்தவர் தஞ்சாவூரில் துரை.சந்திரசேகர் என்ற பெயர் தற்போது மாறி திமுகவினரே கட்சியின் கொடியை 2 ஊர்களில் இறக்கி இருப்பது, தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

64140cookie-checkதஞ்சாவூரில் திமுகவை அழிக்கிறாரா துரை.சந்திரசேகர், 2 ஊரில் திமுக காலி முழு தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!