மாநாடு 30 January 2023
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நினைவாக சென்னையில் உள்ள மெரினா கடலினுள் பேனா வடிவிலான சிலையை அமைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வந்தது, பொதுமக்களின் பணத்தில் 81 கோடி ரூபாயை எடுத்து அரசு சூழலியலை பாதிக்கும் விதத்தில் இந்த செயலை செய்யக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட சிலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நாளை காலை சென்னையில் மக்களிடம் கருத்து கேட்க இருப்பதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது, இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் தானும் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்திருப்பது, தற்போது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடைபெற இருக்கிற கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் எவ்வாறான கேள்விகளைக் கேட்கப் போகிறார் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியிலும் எகிரி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சீமான் ட்விட்டரில் இதைப் பற்றி வெளியிட்டிருப்பதாவது:
மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.
சின்னக் கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி, சென்னை.
நாள்: சனவரி 31, 2023 (நாளை)
காலை 10.30 மணி
நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகளும் பெருந்திரளாய்க் கலந்துகொள்ள இருக்கின்றனர். கடல் சூழலியல் குறித்த அக்கறையுள்ள அனைவரும் பங்குபெறலாம். என்று சம்பந்தப்பட்ட துறைக்கும் அமைச்சருக்கும் டேக் செய்திருக்கிறார்.
@TN_PCB @CMOTamilnadu @SMeyyanathan @evvelu