நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டையில் மட்டும் அதிமுக – தேமுதிக கூட்டணியாம் அதிர்ச்சியில் தலைமை நிர்வாகிகள் :
அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தேமுதிக அதிமுக கூட்டணி அதிகாரபூர்வமற்ற முறையில் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை அறந்தாங்கி ஆகிய நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் அதிமுக மற்றும் தேமுதிக நிர்வாகிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அறந்தாங்கி நகராட்சியில் 3 இடங்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
மற்ற இடங்களில் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக மற்றும் தேமுதிக மேலிட நிர்வாகிகளின் எவ்வித ஆலோசனையும் இல்லாமல் உள்ளூர் நிர்வாகிகளே கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.