மாநாடு 11 July 2023
தமிழக அரசு குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகையும், குடிப்பவர்களுக்கு டாஸ்மாக்கில் நல்ல சரக்கும் கொடுத்து பாதுகாத்து வருகின்ற இவ்வேளையில் எப்பாடுபட்டாவது படித்து குடும்பத்தின் நிலையை உயர்த்தி சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று படிக்க வருகின்ற மாணவர்கள் பயமின்றி படுத்து உறங்குவதற்கு பாதுகாப்பான விடுதி இல்லை என்று வீதியில் இறங்கி பல கட்டமாக போராடி வருகிறார்கள் தஞ்சாவூரில் உள்ள சரபோஜி கல்லூரி மாணவர்கள். இருந்த போதும் இதுவரை அவர்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கவில்லை என்கிற இந்நிலையில் இன்று காலை தஞ்சையில் மாணவர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதன் விவரம் பின்வருமாறு:
தஞ்சை சரபோஜி கல்லூரிக்கு உட்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர் நல விடுதி பழமையான கட்டிடம் இடிந்து விழும் சூழலில் உள்ளது தினந்தோறும் மாணவர்கள் உயிர் பயத்தோடு தங்கி படித்து வருகின்றனர்
தஞ்சாவூரில் சரபோஜி கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட நல விடுதி தங்கி படிக்கின்றனர், இந்த கட்டிடம் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்ற பழமையான கட்டிடம், மழைக்காலங்களில் ஒவ்வொரு இடமும் இடிந்து விழக்கூடிய சூழல் ஏற்படுகிறது, தினந்தோறும் மாணவர் உயிர் பயத்தோடு தங்கி படித்து வருகின்றனர்,
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத ஆட்சியாளர்களை கண்டித்து மாணவர்களுக்கு மாற்று இடம் கேட்டு புதிய விடுதி அமைத்து தர கோரி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் விடுதி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்
இதில் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி தஞ்சை மாவட்டத்தைலைவர் அர்ஜூன் செயலாளர் கு சந்துரு முன்னிலை வகித்தனர் ஏராளமான மாணவர்கள் இப்ப போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் இன்று பக்கத்தில் இருக்கின்ற வேறொரு விடுதியில் தங்க ஏற்பாடு செய்து தருகிறோம் அங்கு தங்கிக் கொள்ளுங்கள் இன்னும் 1 மாத காலத்திற்குள் மாற்று இடம் ஏற்பாடு செய்து தருகிறோம் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனர் மாணவர்கள்.
செய்தி -அபினேஷ்