இவர்களுக்கு கொரோனா வர வாய்ப்புள்ளது
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் கணக்கெடுப்பில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் 68 விழுக்காடும், ஒரே ஒரு தடுப்பூசி செலுத்தியவர்கள் 12 விழுக்காடும் இருக்கின்றார்கள்.80 விழுக்காடு நோயாளிகள் இப்படித்தான் வருகின்றார்கள். அதே போல் 16 விழுக்காடு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.
இது சம்மந்தமாக மருத்துவ நிபுணர்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில், 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அதே போல 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் முடிந்தும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது என தெரிவித்தார்கள். மேலும் தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி 9 முதல் 10 மாதங்கள் கடந்த பின்னரும் பூஸ்டர் டோஸ் செலுத்திகாதவர்களுக்கும் ஒரே மாதிரியான பாதிப்புகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனறார்கள்.ஆகவே முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் தினசரி எண்ணிக்கை 30 ஆக இருந்தால், 92 விழுக்காடு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். 93.4 விழுக்காடு பல்வேறு இணை நோய் உள்ளவர்கள். ஆகவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தற்போது 227 ஆக்சிஜன் ஜெனரேட்டரும், 17 ஆயிரத்து 600 கான்சென்டிரேட்டர்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன. 2ஆம் அலையின்போது 530 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவை அதிகாித்தது. அப்போது வெளி மாநிலங்களிலிருந்து ஏற்பாடு செய்தோம். ஆக்சிஜன் இருப்பை மருந்துவமனையில்தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
சென்னையைப் பொருத்தவரை பாதிப்பு எண்ணிக்கை உயரத்தொடங்கி இப்போது சற்று குறையத்தொடங்கியுள்ளது.எனினும் இதனை வெற்றியாகக்கருதாமல் இந்த நேரத்தில் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
கடந்த ஜனவரி 15ந்தேதி சென்னையில் 8,978 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. இது நூற்றுக்கு 30 விழுக்காடாக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 23.6 விழுக்காடு என குறைந்திருப்பது மிகுந்த நிம்மதியை அளிக்கிறது என்று கூறினார்.
மன உறுதியுடனும், சுயக்கட்டுபாடோடும் இருந்து பெருந்தொற்றில் இருந்து மீள்வோம்.