மாநாடு 30 March 2022
சென்னை பல்லாவரம் 31வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சித்ராதேவி. இவரது கணவர் முரளியின் தம்பி தினேஷ் தனது அண்ணி கவுன்சிலர் ஆனதிலிருந்து மிகப் பெரிய தாதா கெட்டப்பில் சென்று சங்கர் நகர் பகுதிகளில் இருக்கும் கடைகளில் மாமூல் கேட்டு தினமும் அடாவடியில் ஈடுபட்டு இருக்கிறார்.
இவருக்கு சுகுமார் என்ற ரவுடியும் உடந்தையாக இருந்துள்ளார். இவர்கள் இருவரும் திருநீர்மலை ரங்கா நகர் 2-வது தெருவில் வசித்து வருகிறார்கள் .இவன் மிரட்டலுக்கு பணம் கொடுக்க மறுக்கும் வியாபாரிகளின் கடைகளில் உள்ள பொருட்களையெல்லாம் எடுத்து வீதியில் வீசி விடுவானாம் இவ்வாறு சம்பவத்தன்று சங்கர் நகர் பகுதிகளில் கடைகளில் சென்று மாமுல் கேட்டு மிரட்டியுள்ளான். இதன்படி திருநீர்மலை பிரதான சாலையில் அனீஸ் என்பவர் பிரியாணி கடை மற்றும் டீக்கடையும் நடத்தி வந்துள்ளார்.அவரிடம் சென்று 10000 ரூபாய் மாமூல் கேட்டுள்ளார்கள். அனில் 3000 ரூபாய் கொடுத்துள்ளார் மீதி 7000 ரூபாயையும் உடனடியாக கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுளளனர் பணம் கொடுக்க மறுத்த அனீஸ் கடைகளில் இருந்த பொருட்களை வீதிகளில் வீசி ரவுடித்தனம் செய்துள்ளான். தெருக்களில் கிடந்த கற்களை எடுத்து கடைகளில் இருந்த கண்ணாடி பொருட்கள் எல்லாம் அடித்து உடைத்து ரகளை செய்துள்ளான்.
இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட சங்கர் நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். கண்காணிப்பு கேமராவில் இருந்த காட்சிகளை வைத்து அடையாளம் கண்டுகொண்ட காவல்துறையினர் திருநீர்மலை பகுதியில் தினேஷ், சுகுமார் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் பம்மல் பல்லாவரம் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் 500,10000 என்று தொடர்ந்து மாமூல் வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. சுகுமார் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது சங்கர் நகர் காவல் நிலையத்தில் அவன் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் நீதிமன்றத்தில் இவர்களை காவல்துறையினர் நேர்நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் புழல் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டனர் அதன்படி இருவரும் புழல் சிறையில் உள்ளனர்.
மக்கள் சேவை செய்ய தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலரின் உறவினர் இவ்வாறாக மாமூல் வசூலில் ஈடுபட்டு தன்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு துன்பம் விளைவிப்பது அந்த கவுன்சிலருக்கு தெரியாமலா நடந்து இருக்கும் ? இவர்கள் செய்வது குற்றமா ?அல்லது இவர்களை தேர்ந்தெடுத்தது மக்களின் குற்றமா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.