உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு
திமுக ஒதுக்கியதே 2 இடங்கள் அதில் ஓரிடத்தில் கணவரும் ஒரு இடத்தில் மனைவியும் இந்திய அடுத்தடுத்த வார்டுகளில் வேட்பாளராக போட்டியிடுவது கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய நிலையை எடுத்துச் சொல்லும் விதமாகவே தான் அமைந்து உள்ளதாம்.
வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் இரண்டு வார்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது 2 வார்டுகளிலும் அக்கட்சியின் நிர்வாகி மற்றும் அவரின் மனைவி வேட்பாளராக போட்டியிடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மணப்பாறை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நகராட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர நிர்வாகக் குழு உறுப்பினர் தங்கமணி 19வது வார்டில் போட்டியிடுகிறார்.
20 வது வார்டில் தங்கமணியின் மனைவியும், மாதர் சங்கம் மணப்பாறை நகரத்தலைவியுமான மனோன்மணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்களிலும் கணவன் மனைவி இருவரும் வேட்பாளராக களம் இறங்கியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேசமயம் கம்யூனிஸ்டுகளுமா இப்படி என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள்.