மாநாடு 9 March 2022
முன்பெல்லாம் ஒரு புகழ்பெற்ற நபரை எதிர்த்து விமர்சித்து பேச வேண்டும் என்றால் அதிகமாக எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. அதனால் போஸ்டர்கள் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும், அறிக்கைகள் விடுவது, கண்டன போஸ்டர்கள் ஒட்டுவது என்று இருந்தனர். ஆனால் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ட்விட் போடுவதன் மூலமும முகநூலில் பதிவுகள் போடுவதன் மூலமும் தனது எதிர்ப்பை காட்டி விடுகின்றனர். அது சில நேரங்களில் சரியாக பதிவிடும் போது எந்தவித எதிர்வினைகளையும் ஏற்படுத்தாமல் பெரும்பாலானோரால் கவனித்து பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில் தவறாக பதிவுகள் போடுவதன் மூலம் பதிவிட்டவர்களுக்கு கெட்ட பெயரையும் சில சமயங்களில் தண்டனையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது அப்படிப்பட்ட செயல்தான் இது.
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் தலை துண்டிக்கப்படும் என திமுக தொண்டர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் விலக வேண்டுமென முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் இது ஒரு பிரச்சினை ஒன்றின் காரணமாக தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குறித்து திமுக தொண்டர் ஒருவர் தனது முகநூலில் அவதூறாக பேசி இருந்தார்
அதில் சாதி வெறிபிடித்த எம்ஆர்கே அவர்களின் தலை துண்டிக்கப்படும் என்றும் எம்ஆர்கே ஆட்டம் அழிவின் ஆரம்பம் என்றும் பதிவு செய்திருந்தார்
இதனை அடுத்து இந்த பதிவு செய்த முரளி கிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்