Spread the love

மாநாடு 18 February 2022

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கவிருக்கிறது நல்லவர்கள் நல்லவர்களுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள் நீங்கள் ?

வாக்குக்கு பணம்  கொடுப்பது தேர்தல் நேரத்தில் வாடிக்கையான ஒன்று தான், என ஆகிவிட்ட காரணத்தினால், அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு முன் மாற்று கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக குற்றம் சாட்டினாலும், களத்தில் பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.

நாங்கள் கொடுப்பதை நீங்கள் கண்டுகொள்ளாதீர்கள், நீங்கள் கொடுப்பதை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்கிற ரீதியில்

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்கின்றன அரசியல் கட்சிகள்.

இப்படி பொதுவாக அணைத்து அரசியல் கட்சிகளையும் குற்றம் சாட்டுவது தவறல்லவா ? என கேட்டால் , ஆமாம் தவறு தான்.

திமுக கூட்டணியில் உள்ள இடது சாரிகள், நாம் தமிழர், மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் இந்த ஒட்டுக்கு பணம் என்கிற முறையை கையாளவில்லை என்பதாகவே தெரிகிறது.

பணம், துண்டு, குடம், குக்கர் என பலவகைகளில் வாக்குகள் விலை பேசப்பட்டாலும், நாம் பணம் கொடுத்ததற்காக வாக்காளர் நமக்கு தான் வாக்களிப்பார் என அரசியல் கட்சிகள் கண்ணை மூடிக்கொண்டு வாக்காளர்களை நம்பவில்லை.அந்த அளவிற்கு புரிதல் இருந்தாலும், கொடுக்காமல் போனால், வாக்காளர்  கோபத்துக்கு ஆளாகி தானாக விழ வேண்டிய வாக்கும் விழாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில், ‘தொலையுது போ என செலவழிக்கும் நிலைக்கு வந்து விட்டன கட்சிகள்.

அரசியல் கட்சிகளின் நிலை இப்படியும் , பணத்தை எதிர்பார்க்கும் நிலையில் குடும்பஸ்தர்கள் பலர் இருந்தாலும், தாங்களும் பணம் வாங்காமல், பெற்றோர்களையும் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தும் பல இளைஞர்களும் உருவாகியிருப்பதாக தெரிகிறது.

பல வீடுகளில் பிள்ளைகளுக்கு தெரியாமல் அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கும் சுழலும் உள்ளது. கெட்டு போன அரசியலில் நம்பிக்கை தரும் ஒரு விஷயமாக இது மட்டுமே உள்ளது.

இதன் காரணமாக நாம் தமிழர் கட்சியை நோக்கி நல்லவர்கள், இளைஞர்களின் பார்வை விழுந்துள்ளது என்பது,இந்த தேர்தலில் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது.

மேலும் சில அரசியல் நோக்கர்களிடம் கேட்ட போது ஒரு வார்டில் 5000 வாக்காளர்கள் இருப்பார்கள் ஒரு வார்டில் 2500 வாக்காளர்கள் கூட இருப்பார்கள் அப்படி வைத்துப் பார்க்கும் போது சராசரியாக ஒரு வார்டில் 3000 வாக்காளர்கள் என்று கணக்கு வைத்து பார்த்தோமானால் ஒரு வாக்குக்கு 500 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் 3000 வாக்குக்கு 15 லட்ச ரூபாய் ஆகிறது. சாதாரணமாக கடைக்கோடி மக்கள் பணியான ஒரு கவுன்சிலர் வெற்றி பெற்று வருவதற்கு 15 லட்ச ரூபாய் செலவு செய்தால் எப்படி அந்த வார்டுக்கு அவர் நல்லது செய்வார்? எப்படி அவரால் செய்ய முடியும்? அப்படி தன் பணத்தை செலவு செய்து மக்களுக்கு சேவை செய்யும் அளவுக்கு தமிழ்நாட்டில் இன்னும் திமுகவும் ,அதிமுகவும் மக்கள் சேவையில் உண்மையிலே உள்ளவர்களை தங்கள் கட்சியின் பதவிகளுக்குப்போட்டியிட கூட வாய்ப்பு கொடுப்பது இல்லை என்பதுதான் உண்மை நீங்கள்  சிந்தித்துப்பார்க்க வேண்டும் இப்போது பணம் கொடுக்கும் இவர்கள் கொரோனா பெருுந்தோட்ட வந்தபோது இந்தப் பணத்தின துளி அளவு கூட எடுத்து செலவு பண்ணாத ஏன்? அப்படி என்றால் மக்களின் வாழ்க்கை அவர்களுக்கு முக்கியமல்ல அவர்களின் வாக்கு தான் அவர்களுக்கு முக்கியம் என்பதை மக்கள் உணர வேண்டும் மீண்டும் இப்படி சிந்திக்காமல் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்கு செலுத்தினால் வாக்களித்த அவர்களின் வாரிசுகள் இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் சிக்கி எதிர்காலத்தை தொலைக்க வேண்டிய நிலைதான் வரும் என்று சொல்லிய பெரியவர் நம்மிடமே கேட்டார் ஆமாம் தம்பி திமுக ஆட்சிக்கு இப்ப தான் வந்துச்சு அதுக்குள்ள எப்படி தம்பி இவ்வளவு பணம் வந்துச்சு என்று நம்மிடமே கேட்டுவிட்டு பெருமூச்சு விட்டுவிட்டு நல்லா ஜனநாயகத்தை காப்பாத்துவங்க இவங்க. மக்கள்தான் விழித்து இருக்கணும் என்று சொல்லி சென்றார் அந்த பெரியவர்.

18950cookie-checkநல்லவர்கள் நல்லவர்களுக்கு தான் வாக்களிப்பார்கள் நீங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!