Spread the love

மாநாடு 14 March 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பெரியளவில் வெற்றி கிடைத்துள்ளது.21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் திமுக பெற்ற வெற்றி அக்கட்சிக்கு புது நம்பிக்கையை ஊட்டியுள்ளது. கொங்கு எங்கள் கோட்டை என்று கூறிக்கொண்டிருந்த அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த தேர்தல் முடிவுகள்.

ஒரு பக்கம் திமுகவின் வெற்றி ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொரு புறம் கட்சியினர் தலைமையின் உத்தரவுக்கு கட்டுபடாமல் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டது சங்கடத்தை ஏற்படுத்தியது. பதவி விலக சொல்லியும் பலர் விலகாமல் இருப்பது தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது டெல்லியிலிருந்து மற்றொரு சிக்கல் வர உள்ளதாம்.

திமுகவின் வெற்றியை பாஜக உற்று கவனித்து வருகிறதாம். திமுகவின் தேர்தல் பணிகள் குறித்த விவரங்கள் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சென்றுள்ளன. திமுக பலவீனமாக இருந்த இடங்களில்கூட வெற்றியை தேடித் தந்த அமைச்சர்கள் விவரங்க்ளை டெல்லி பாஜக கேட்டுப்பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.

அவர்களுக்கு அமலாக்கத்துறை மூலம் செக் வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முதலிடத்தில் இருப்பது அமைச்சர் செந்தில் பாலாஜி என்கிறார்கள்.

அதிமுக போல் கொங்கு மண்டலத்தில் கொடி நாட்ட நினைத்த பாஜகவுக்கு திமுகவின் வெற்றி கண்ணை உறுத்துகிறதாம். திமுகவுக்கு வாய்ப்பே இல்லை என்று சொன்ன கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறக் காரணமாயிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை குறிவைத்துள்ளதாம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே திமுகவில் சில அமைச்சர்களை குறிவைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை இருக்கும் என சொல்லப்பட்டது. தற்போது தேர்தல் நிறைவடைந்த நிலையில் மீண்டும் அந்த பட்டியல் கையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .

24770cookie-checkதூக்கத் தயாரான மேலிடம் தப்புவாரா செந்தில் பாலாஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!