Spread the love

மாநாடு 03 August 2023

ஒரு கதவை அடைத்தால் மறுக்கதவை திறப்பான் இறைவன் என்று சொல்வதை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் ஆனால் தஞ்சாவூர் மாநகராட்சியில் செய்யப்பட்டிருக்கின்ற பல பணிகளைத் தொடர்ந்து உற்று பார்க்கின்றவர்களுக்கு நன்கு உணர முடியும் ஒரு பணிகளில் செய்யப்பட்ட முறைகேடுகள் மக்கள் மனதில் மறைவதற்குள் அடுத்த முறைகேடுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றது என்று.

அப்படி என்ன இப்போது நடந்திருக்கிறது என்றால் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி தஞ்சாவூர் கீழவாசல் சிராஜுதீன் நகர் பெரிய சாலையில் 6.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆதம் வடிகால் வாய்க்கால் பணிகள் நடைபெற்று வந்ததையொட்டி இந்தப் பகுதியில் கட்டப்பட்ட தரைப்பாலும் கட்டப்பட்ட 10 நாட்களில் இடிந்து விழுந்ததை யாரும் இதுவரை மறந்திருக்க முடியாது.

அந்தப் பாலம் கட்டப்பட்ட போதே தரமானதாக கட்டப்படவில்லை என்று அதை உடனடியாக கண்காணித்து சரி செய்ய வேண்டும் என்று மாநகராட்சியில் மனு அளித்ததாகவும் அந்தப் பகுதி மக்கள் அப்போதே கூறியிருந்தார்கள் ஆனாலும் கூட பாலம் இடிந்து விழுந்த பகுதிக்கு வந்த தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனும் , தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது அந்தப் பாலம் 2.40 லட்சம் ரூபாய் செலவில் தான் கட்டப்பட்டது என்று அந்த பாலம் கட்டப்பட்டதின் பொருளாதாரத்தை சொன்னார்களே ஒழிய அந்த பாலம் கட்டப்பட்டதன் தராதரத்தை ஏனோ சொல்லவில்லை உடனடியாக மீதம் இருந்த பாலத்தின் கட்டுமானங்கள் முழுவதுமாக இருந்த இடம் தெரியாமல் அகற்றப்பட்டது.

மாநகராட்சி மேயரும், ஆணையரும் இந்த பகுதிக்கு வரும் வரை அந்த பாலத்தில் சிக்கிய லாரியின் ஓட்டுநர் அந்த பாலத்தில் இருந்த சிமென்ட்களை சாதாரணமாக வெறும் கையால் பெயர்த்து காட்டி இந்த பாலத்தின் தரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் அதுவும் ஊடகங்களில் அப்போதே காட்சிப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டது. இவர்கள் வந்த பிறகு லாரியின் உரிமையாளர் இடிந்து விழுந்த பாலத்தை தானே தன் சொந்த செலவில் கட்டிக் கொடுப்பதாக தெரிவித்தார் அவர் மீது வழக்கு பதியப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும் இடிந்து விழுந்த இந்தப் பாலம் , தஞ்சாவூர் ராஜராஜன் நகரில் போடப்பட்ட தரமற்ற சாலை உட்பட நடைபெற்ற… நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பல பணிகள் தஞ்சாவூர் மாநகராட்சி “உதவி பொறியாளர் கார்த்திகேயன்”

கண்காணிப்பில் தான் நடைபெறுவதாக தெரிகிறது.

இதேபோல தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்றும் ஒரு செய்தி….

(அந்த பாலம் இடிந்து விழுந்த போது மாநாடு youtube சேனலில் வெளியான செய்தி லிங்க் தருகிறேன் அதையும் பார்த்து தெரிந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் பாருங்கள்)

இன்று காலை நமக்கு ஒரு அழைப்பு வந்தது அதில் பேசிய நபர் தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கரகாரம் வெண்ணாறு பகுதியிலிருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சொல்ல தொடங்கினார் அதாவது பள்ளியக்கரகாரத்திலிருந்து வெண்ணாற்றங்கரை ஒட்டி தென்பரம்பூர் செல்லும் பாதையில் பள்ளியக்கரகாரம் வெண்ணாற்று பாலத்தில் இருந்து மிக அருகில் அமைந்துள்ள நீரேற்று நிலையத்திற்கு ( பம்ப் ஸ்டேசன்) திருமானூர் கொள்ளிடத்தில் இருந்து குடிதண்ணீர் குழாய் வருகிறது அந்தத் தண்ணீர் தஞ்சாவூர் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீர் குழாய் தரையில் தரமற்றதாக அமைக்கப்பட்டு இருந்திருக்கிறது. அதனால் தண்ணீர் குழாயின் வெளியே  கசிந்து கொண்டிருந்திருக்கும் போல சார்  அதனால் இன்று காலை 7 மணி அளவில் அந்த இடத்தில் இருந்த ரோட்டில் 1 அடி அளவிற்கு வெடிப்பு ஏற்பட்டு நீளமாக சாலையின் குறுக்கே பாதையை துண்டிக்கும் அளவிற்கு பள்ளம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது

அந்த சமயத்தில் அந்தப் பாதை வழியாக பள்ளியக்கரகாரம் நோக்கி வந்த ஆட்டோ சாலையில் ஏற்பட்ட வெடிப்பில் மாட்டியிருக்கிறது . இச் செய்தி அறிந்து அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தில் சிக்கிய ஆட்டோவை மீட்டு இருக்கிறார்கள் நேரம் அதிகமாக அதிகமாக அந்தப் பள்ளம் பெரிதாக விரிவடைந்து சாலை ஏறக்குறைய 10 அடி அளவிற்கு

துண்டிக்கப்பட்டிருக்கிறது அதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது அது மட்டுமல்லாமல் பள்ளத்தின் அருகே சரியான எச்சரிக்கை எதுவும் செய்யப்படாமல் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது நீங்கள் நேரில் வர முடியுமா என்று கேட்டார் நேரில் வருகிறேன் என்று சொல்லி நாமும் நிகழ்விடத்திற்கு சென்று பார்த்தபோது மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது அதன் பிறகு அங்கிருந்தவர்களிடமும் இந்தத் தண்ணீர் குழாயை பற்றி விசாரித்தோம் அவர்கள் கூறும்போது ஏற்கனவே இருந்த தண்ணீர் குழாய் பழுது ஏற்பட்டது என்று கூறி தான் நிதிகள் ஒதுக்கப்பட்டு இந்த தண்ணீர் குழாய் அமைக்கப்பட்டது இது பயன்பாட்டிற்கு வந்து ஏறக்குறைய 6 மாதம் தான் இருக்கும் அதற்குள்ளாகவே இவ்வாறு ஆகி இருக்கிறது என்றால் என்னங்க அர்த்தம் இங்கு பார்க்கப்பட்டிருக்கும் பணிகள் நேர்மையாகவும் தரமாகவும் நடைபெறவில்லை என்பதை தானே இதன் மூலம் அறிய முடிகிறது என்றார்கள் நம்மிடம் பேசியவர்கள்.

அதன் பிறகு விசாரித்த போது தெரிய வந்ததாவது: கடந்த அதிமுக ஆட்சியில் திருமானூரில் இருந்து இந்த பைப் லைன் போடுவதற்கு சென்னையை சேர்ந்த கே.எம்.இன்ஜினியரிங் ஒர்க்ஸ் என்கிற நிறுவனம் பணிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் ஏறக்குறைய 30 கிலோமீட்டர் அளவிற்கும் அதேபோல திருமானூரிலிருந்து பள்ளியக்கரகாரம் வரை பைப் குழாய்கள் போடுவதற்கும் பணிக்கப்பட்டு இருக்கிறது அதிமுகஆட்சியில் பணிகள் கொடுக்கப்பட்ட போதும் இந்த திமுக ஆட்சியில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அந்தப் பணிகளை அப்போதும் இப்போதும் மேற்பார்வையிட்டு கள ஆய்வு செய்ய வேண்டிய இடத்தில் இருப்பது தஞ்சாவூர் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன் என்பதும் அவர் மேற்பார்வையில் எவ்வளவு தரமாக வேலைகள் நடைபெற்றிருக்கிறது என்பதற்கு சான்றாக ஆதம் பாலம், ராஜராஜன் நகரில் தரமற்ற சாலை அமைக்கப்பட்டு அது கையால் பெயர்த்து எடுக்கப்பட்டு மக்கள் போராடிய ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாநகராட்சியில் தரமாக வேலை நடைபெறாமல் இருப்பதற்கும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுவதற்கும், பொதுமக்களிடம் ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் உண்டாவதற்கும் தஞ்சாவூர் மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயனும் காரணமாக இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது .

எனவே தஞ்சாவூரில் சாலைகள் உட்பட வேலைகள் திறம்பட நடைபெற வேண்டும் என்றால் ஆட்சியையும் காட்சியையும் மாற்றினால் மட்டும் போதாது, மாநகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயனை சிந்தித்து தண்டிக்காவிட்டால் இங்கு எதுவுமே மாறாது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

என்னங்க இது AEகார்த்திகேயன் மேற்பார்வையில் கட்டப்பட்ட அனைத்துமே உள்வாங்குகிறது  இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இவர் நிறைய வாங்கி இருப்பாரோ என்று என்ன தோன்றுகிறது …

உண்மையை உலகிற்கு சொல்வார்களா ? இவர் மீது நடவடிக்கை எடுப்பார்களா சம்பந்தப்பட்டவர்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வீடியோ லிங்க் :https://youtu.be/VVtP3KE2yCA

மேலும் அதிக தகவல்கள் அடுத்த மாதம் வர இருக்கிற அரசியல் மாநாடு இதழில் வெளியிடப்படும் படித்து பகிர்ந்து உதவுங்கள்.

71550cookie-checkதஞ்சாவூர் மாநகராட்சி பணி லட்சணம் சாலையில் பள்ளம் பாதை துண்டிப்பு பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!