மாநாடு 25 April 2022
பொதுவாகவே விவசாயிகள் என்றாலே மக்களுக்கு உணவு கொடுத்து விட்டு தங்கள் உணவுக்கும் உயிர் வாழ்விற்கும் நிலையற்ற தன்மையில் வாழ்பவர்கள் என்றாள் மிகையாகாது. அதன்படி விவசாயத்தில் இரண்டு வகை விவசாயம் உள்ளது அதில் ஒருவகை தரையில் செய்யும் பயிர் விவசாயம் மற்றொன்று தண்ணீரில் செய்யும் மீன்பிடி விவசாயம் தரையில் நடைபெறும் விவசாயத்திற்கு ஏதாவது இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலோ வேறு எதுவும் பாதிப்பு ஏற்பட்டாலோ ஒன்று கூடி போராட சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதை நாம் காண முடியும்.

ஆனால் மீன்பிடி தொழிலாளர்களுக்கு எதுவும் பிரச்சனை என்றால் அவ்வளவாக அனைவரும் ஒன்று கூடி உரிமை குரல் எழுப்புவது என்பது மிகவும் அரிதாகவே இருக்கிறது. மேலும் மீன்பிடி தொழிலாளர்களே அனைத்து பகுதியிலும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக இருப்பது இல்லை என்பதை கூட காணமுடிகின்றது. இவ்வாறான பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு அடிப்படைத் தேவைகளைக்கூட அரசுகளிடம் இருந்து பெறுவதற்கு முடியாத நிலையில் பல மீன்பிடித் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் என்கிற ஊர் உள்ளது இந்த ஊரில் ஏறக்குறைய 600 மீன்பிடி தொழிலாளர்களின் குடும்பங்கள் உள்ளது இந்த தொழிலை நம்பி 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றார்கள். அவர்களில் சிலரை சந்தித்து பேசினோம் அப்போது அவர்கள் கூறியதாவது:

பன்னெடுங்காலமாக நாங்கள் மீன்பிடித் தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறோம் ஆரம்ப காலகட்டத்தில் மீன்பிடித் தொழிலில் எங்கள் முன்னவர்கள் ஈடுபட்டிருந்த போது மின்சாரங்கள் கிடையாது அந்த நேரங்களில் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்து விட்டு தங்களது கரைக்கு வருவதற்காக நாங்கள் அரிக்கன் விளக்குகளை பயன்படுத்தி வந்தோம் காலப்போக்கில் மின்சாரங்கள் வந்துவிட்ட போதும் எங்களுக்கு இப்போதைய நிலையில் கலங்கரை விளக்கு அரசுகள் அமைத்துத் தரவில்லை.
ஆனால் ஏறத்தாழ 1970ஆம் ஆண்டு காலகட்டங்களில் கம்பியாலான உயரமான இடத்தில் மின் விளக்கை எரியவிட்டு இருந்தார்கள், அதனை எங்கள் கரையின் அடையாளமாக கொண்டு நாங்கள் மீன் பிடித்து விட்டு கரைக்கு வருவோம்.ஆனால் அதன்பிறகு எங்கள் கிராமத்திற்கு கலங்கரை விளக்கு எந்த அரசாங்கமும் அமைத்துத் தரவில்லை. இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்கள் கரை தெரியாமல் அருகில் இருக்கும் மல்லிப்பட்டினம் கரைக்கு சென்று விட்டோம். இந்த செய்தியின் வாயிலாக நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால்.

கோரிக்கைகள்:
எங்களுக்கு கலங்கரை விளக்கு அரசு அமைத்து தர வேண்டும். அதுமட்டுமல்லாமல்
மீன் பிடிக்கும் வலை 40 ஆயிரத்திலிருந்து 4 லட்ச ரூபாய் வரை இருக்கிறது அதனை போட்டு உலர்த்தி பாதுகாக்க, மழை நேரங்களில் ஒதுங்கி நிற்க ஒரு கட்டிடம் எங்களுக்கு தேவை ஏனென்றால் எந்நேரமும் வலை வெயிலில் கிடந்தாள் சீக்கிரமே பழுதாகிவிடும் இதனால் எங்களுக்கு அடிக்கடி பொருள் விரயம் ஆகிவிடுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு கேட்கின்றோம். இதனைத் தொடர்ந்து

நாங்கள் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்தி பாதுகாத்து வைப்பதற்கு குளிரூட்டும் பெட்டி அரசு எங்களுக்கு தந்து உதவ வேண்டும் இதுபோன்ற அடிப்படைத் தேவையான நியாயமான கோரிக்கைகளை தான் நாங்கள் அரசு அதிகாரிகளுக்கும் ,அரசுகளுக்கும் முன்வைக்கின்றோம் ஆனால் எங்களிடம் வாக்கு வாங்க வருபவர்கள் எங்களின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை என்பது தான் எங்களுக்கு வருத்தமாக உள்ளது எனவே தயவுகூர்ந்து எங்களின் தேவைகளை பூர்த்தி செய்து எங்களுக்கு உதவ வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம் என்றார்கள்.
இவர்களின் பேட்டியையும் இதில் இணைத்துள்ளோம் அதனையும் அனைவரும் கண்டு கேட்டு பலருக்கும் பகிர்ந்து இவர்களில் துன்ப துயரங்களை துடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் வீடியோ லிங்க் இதை தொடவும்:
