Spread the love

மாநாடு 14 July 2022

இந்தியாவின் பெண்களின் பாதுகாப்பு நலனுக்காக மத்திய அரசு பலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறப்படுகிறது,அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் விதவைகளுக்கான பென்சன் திட்டம் வித்வா பென்சன் யோஜனா விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:18 முதல் 60 வயது வரை உள்ள விதவை பெண்களுக்கு இத்திட்டத்தின் பயன் கிடைக்கும். கணவனை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்படும் பெண்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு இந்த ஆவணங்கள் தேவை: விதவை பென்சன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர் ஆதார் அட்டை, கணவரின் இறப்புச் சான்றிதழ், அலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், இருப்பிட சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகம், வயதுச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் ஆகியவை தேவை.

இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை பயனாளர்களின் நேரடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். கணவரை இழந்து கஷ்டப்படும் பெண்களுக்கு இந்த உதவி தொகை கொஞ்சம் அவர்களின் பாரத்தை குறைப்பதாக இருக்கும். ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு கீழே இருப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

43530cookie-checkஅரசு ஓய்வூதிய திட்டத்திற்கு இப்படி விண்ணப்பிக்கலாம்

Leave a Reply

error: Content is protected !!