மாநாடு 19 January 2023
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுதோறும் புனித அந்தோணியார் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு சல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இன்று காலை 7 மணி அளவில் சல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது , இப்போட்டியினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருக்கானூர் பட்டி பங்குத்தந்தை தேவதாஸ் இக்னேசியர் தொடங்கி வைத்தார்கள்,
542 காளைகளும், 401 வீரர்களும் பங்கேற்றுக் கொண்டு இருக்கிறார்கள், அரசு அறிவித்திருந்தது படி இணையத்தில் பதிந்து ஆன்லைன் அனுமதி சீட்டு பெற்று வரிசையில் முறையாக காளைகளும் அவிழ்த்து விடப்படுகிறது.
இந்த சல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்காக கடந்த 15 நாட்களாக மாதா கோயில் தெருவில் வாடிவாசல் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள் என்று தெரிய வருகிறது, வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் போடப்பட்டிருக்கிறது,
காளைகளை தழுவும் காளையர்களுக்கு காயம் பட்டால் முதலுதவி செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது, இது பாதுகாப்பு பணிக்காக வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் நித்தியா தலைமையில் 700 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஆண்டுதோறும் இந்நாளில் இங்குள்ள ஒவ்வொருவரின் வீடுகளிலும் ஏறக்குறைய தலா 1 மூட்டை அரிசியில் சமையல் செய்யப்பட்டு வருகிற அனைவருக்கும் பாகுபாடின்றி பாசத்தோடு விருந்தளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது இச்செயல் வெளியூர் மக்களால் பாராட்டப்படுகிறது.