மாநாடு 21 March 2022
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.
இன்று விசாரணை நடந்த நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று காலை மற்றும் பிற்பகல் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.உணவு இடைவெளிக்கு பிறகு ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொடர் விசாரணை நடத்திவந்தது.
இந்த விசாரணையின்போது அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிகளை அகற்ற கூறவில்லை என்றும் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானது எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளாராம்.