மாநாடு 27 July 2022
தமிழ்நாட்டில் அதிமுக சார்பாக மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரிகள் உயர்வை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது, மூன்றாவது நாளான இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: திமுக அரசு அதிமுகவை கண்டு அஞ்சு நடுங்குகிறது அதன் காரணமாக தான் அதிமுகவினர் மீது தொடர்ந்து வழக்குகள் போடுகிறது, திமுக விபத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டது கொஞ்சம் கூட பொதுமக்களைப் பற்றி சிந்திக்கவே இல்லை அதனால் தான் 12 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரை மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது தற்போதைய திமுக அரசு, அனைத்து தேர்தல்களும் முடிந்த பிறகு விலைவாசியை திமுக அரசு உயர்த்தி இருக்கிறது, மின்சார கட்டணம், சொத்துக்கள் வரி உட்பட அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.
இப்போது இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வெறும் போட்டோ சூட் முதலமைச்சர் ,இவரோடு சேர்ந்து கொண்டு அதிமுகவை அழிப்பதற்காக உள்ளிருந்தே வேலை செய்தவர்களை கண்டுபிடித்து விட்டோம் ,கட்சியிலிருந்து நீக்கி விட்டோம். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று பேசினார்.
அதனைத் தொடர்ந்து தொண்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் இட தயாராகிக் கொண்டிருந்தார்கள் அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது, அருகில் இருந்த தொண்டர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரின் உடல் நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மயக்கம் வந்ததாக கூறப்படுகிறது, அதன் பிறகு முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.