மாநாடு 21 July 2022
தமிழ்நாடு அரசு சமீப காலமாக பல பொருட்களின் விலைகளையும் , வீட்டின் வரிகளையும், உயர்த்தி உள்ளது இன்னும் ஓரிரு நாட்களில் மின் கட்டணமும் உயரும் என்று அறிவித்திருக்கிறது.
இதனால் மக்கள் ஆளும் திமுக மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள் இந்நிலையில் ஆவின் நெய். தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கும் விலை உயர்வை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எவ்வளவு விலை உயர்கிறது பட்டியல்:
ஆவின் தயிர் 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் ஆவின் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் தயிர் பாக்கெட்டின் விலை 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 1 லிட்டர் தயிருக்கு 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.1 லிட்டர் நெய்க்கு 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதைத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சூசகமாக சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்று சொல்லி இருப்பாரோ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.