மாநாடு 22 September 2023
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் மருத்துவக் கல்லூரியின் இரண்டாவது கேட்டின் எதிர்ப்புறம் வெங்கடேச பவனம் என்கிற பெயரில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தில் தற்போது ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பொருட்களை ஏஜென்சி எடுத்திருக்கும் ஸ்ரீ பாலாஜி ஏஜென்சீஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு இருந்து அருண் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் கடைகளுக்கு வைக்கப்படும் குளிரூட்டிப் பெட்டி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது, கடைகளுக்கு கொடுப்பதற்காகவும், கொடுத்தது போகவும் இந்த கட்டிடத்தில் தற்போது ஏறக்குறைய 50 குளிரூட்டி பெட்டிகள் இருந்ததாகவும் குறப்பிடுகிறது,
சற்று நேரத்துக்கு முன்பு இந்த கட்டிடத்தின் உள்ளிருந்து கரும்புகை அதிக அளவில் வர ஆரம்பித்தது இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள், அதனடிப்படையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இங்கு ஏற்பட்டிருந்த புகையை ,பெரும் தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அனைத்து வருகிறார்கள்,
மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்,முதற்கட்டமாக இந்த குடோனில் இருந்த குளிரூட்டிப்பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விரைந்து நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது, இந்த பகுதியை சுற்றிலும் வீடுகளும், வணிக நிறுவனங்களும் ,எதிர் புறத்தில் மருத்துவக் கல்லூரியும் ,மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இருக்கிறது. பெரும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக நிலைமை கட்டுக்குள் வந்தது. இங்கிருந்து வந்த புகையால் சிறிது நேரம் அந்தப் பகுதியே பரபரப்பானது,
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினருக்கும் விரைந்து தகவலை கொடுத்த பொதுமக்களுக்கும் மாநாடு இதழ் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
செய்தி: அபினேஷ், சிவனேசன்.