மாநாடு 4 June 2022
எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பிரமாண்டப் பேரணி நடைபெற்றது அதில் விண்ணை பிளக்கும் அளவிற்கு தமிழக ஆளுநர் ரவியை ஒன்றிய அரசேத் திரும்பப் பெறு என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. ஆளுநர் மாளிகை முற்றுகைக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அதற்கு முன்னதாகவே மேடையமைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உரையாற்றினார். மத்திய அரசு தாங்கள் நினைப்பதை தாங்கள் நியமிக்குமாறு மலர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்களில் நிறைவேற்றி வருகிறது அதன்படி தமிழகத்தில் ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழர் விரோதப் போக்கினை அவர் வெளிப்படுத்தி வருகின்றார்
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே ஆளுநர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.ஆளுநரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பை மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையிலே தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் இருக்கின்றது. குலக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பரப்புரை சக்தியாகவும் இவர் செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து இதுபோன்ற தமிழர் விரோதப் போக்கினை மேற்கொள்ளும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் இல்லை என்றால் ஆளுநரை திரும்பப்பெறும் மாபெரும் மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்படும் என்று பேசினார்.
இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் தாயார் மறைந்தார் என்ற செய்தி முபாரக் அவர்களுக்கு தெரிய படுத்தப்பட்டிருக்கிறது. தனது தாயின் மறைவை தெரிந்தும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பேணிக்காத்த தாயின் மரண செய்தி கேட்டும் போராட்டத்தை முன்னெடுத்த நெல்லை முபாரக் அவர்களின் அவர்களின் துயரில் தானும் பங்கெடுப்பதாக இவ்வாறு தெரிவித்திருக்கிறார்:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் அன்புச்சகோதரர் முபாரக் அவர்களுடைய தாயார் ஷரிஃபா பீவி அம்மையார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.
https://twitter.com/SeemanOfficial/status/1533081070971031552?t=c4yn1T9NQd5-Zik5iwzK-A&s=19