மாநாடு 29 November 2022
தஞ்சாவூர் ரயிலடியில் இன்று காலை 10 மணி அளவில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் மின் கட்டண உயர்வு,சொத்துவரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இரவில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்பு இருந்த பணி நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும், மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் தவணை வசூல் செய்யும் போது பெண்களிடம் மோசமாக பேசுவதையும், கந்து வட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் முறையை கண்டித்தும்,தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்கவும், நாளுக்கு நாள் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகமாக நடைபெற்று வருவதை தடுத்திட ஒன்றிய,மாநில அரசுகள் கடுமையான தண்டனை அறிவித்து, நடவடிக்கை எடுத்து வன்கொடுமைகளிலிருந்து பெண்களை பாதுகாத்திடவும் வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சை மாவட்ட குழ சார்பில் மாநிலந்தழுவி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ம.விஜயலெட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ். தனசீலி,மாவட்ட துணை செயலாளர் ஏ.எஸ்தர் லீமா, பொருளாளர் இரா.ஶ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.கிருஷ்ணன் துவக்கி வைத்தார், நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா சிறப்புரையாற்றினார்,மாநகர செயலாளர் ஆர். பிரபாகர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.தஞ்சை மாநகர செயலாளர் ஆர். பத்மாவதி, ஒன்றிய நிர்வாகிகள் தஞ்சை எஸ்.மல்லிகா,ஒரத்தநாடு எஸ்.எலிசபெத், பட்டுக்கோட்டை ஜி..ஜானகி, எஸ். சகுந்தலா, பேராவூரணி கலைச்செல்வி, திருவோணம் ஜி.தவமணி, மதுக்கூர் அ.ஜெனிதா, சேதுபாசத்திரம் கனகம் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.