லஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைப்பு கொடுத்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய வீடு உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா,மகன்கள் சசிமோகன், சந்திரமோகன்,மருமகள் வைஷ்ணவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக கூறி அவர்கள் 5 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கூறுகையில், ‘கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ரெய்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி அதிமுகவை அழிக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், மக்கள் மத்தியில் திமுக அவதூறுகளை பரப்புகிறது. சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா?
தேர்தலை நடத்தினால் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்காது என்றார்.

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை அதனை மறைத்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பார்க்கிறது திமுக. லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக தான் உள்ளேன்.எப்போது வேண்டுமென்றாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம் நான் தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
80100cookie-checkலஞ்ச ஒழிப்பு துறைக்கு அழைப்பு கொடுத்தார் ஜெயக்குமார்
awesome