Spread the love

மாநாடு 12 February 2022

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது.ஆனால், காதல் பேரில் 7500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?

காதல் பேரில் அமெரிக்காவில் சுமார் 24000 பேரிடம் 7500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக FBI தகவல் வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையும்,மோசடி தொகையும் இதை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வகை மோசடிகளை ரொமான்ஸ் மோசடி என்கின்றனர்.இந்த ரொமான்ஸ் மோசடி கும்பல்கள் எப்படி செயல்படுகின்றனர்?

ஆன்லைனில் சமூக வலைதளங்களில் ஒரு நபரின் அன்பையும், நம்பிக்கையையும் பெறுவதே இவர்களின் முதல் திட்டம். பின்னர் அவர்களை காதல் வலையில் சிக்கவைத்து பணத்தை பெறுகின்றனர் அல்லது கொள்ளையடித்து விடுகின்றனர்.

முதலில் சமூக வலைதளங்களில் ஒருவரை தேர்வு செய்து அவர்களிடம் நட்பாக பேசுவது.பின்னர் அன்பாகவும், அரவணைப்பாகவும் பேசுவது.அதையடுத்து டேட்டிங், காதல் என பேச்சு கொடுப்பது.

நேரில் சந்திக்கலாம் என திட்டமிடும்போது அந்த நேரத்தில் பணம் கேட்பது.கிடைக்கும் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிடுவது என நூதன முறையில் காதலை வைத்து கொள்ளையடிக்கிறது இந்த மோசடி கும்பல். எனவே, சமூக வலைதள போலிகளிடம் ஜாக்கிரதையாக இருக்கும்படி FBI எச்சரிக்கிறது.

இது அங்கு மட்டுமல்ல எங்கும் நிறைந்துள்ளதாகவும் தொகையும், நபர்களும் தான் மாறுபடுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.

17480cookie-checkகாதல் பேரில் 7500 கோடி மோசடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!