Spread the love

மாநாடு 9 April 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்து தலைமறைவாக இருந்தவர்களை இன்று கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு Amaze Marketing & Consultancy என்ற நிறுவனமானம் தொலைக்காட்சியில் கொடுத்திருந்த ”குறைந்த முதலீடு செய்தால் வாகனம் வாங்கி தரப்படும்” என்ற விளம்பரத்தை நம்பி சிறு தொகையினை கட்டி இருசக்கர வாகனத்தை வாங்கிய நிலையில் மேலும் நான்கு சக்கர வாகனம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி முன்தொகையாக ரூ.2,05,000/- தொகையினை பெற்று ஏமாற்றியதாகவும் இதே போன்று 22 நபர்களிடமும் பண மோசடி செய்ததாகவும் தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த வைத்தீஷ்வரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவு அலுவகத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்

குற்றவாளிகளான 1.கோயம்புத்தூரைச் சேர்ந்த 46 வயது உடைய அர்பஷ் மற்றும் 2. சேலம் மாவட்டம், அயோத்திப்பட்டினத்தைச் சேர்ந்த 30 வயது உடைய ஹரி பிரசாத் ஆகியோர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தவர்களை இன்று தனிப்படை பிரிவினர் கோயம்புத்தூரில் கைது உள்ளனர்.
இது போன்ற நிறுவனங்களின் உண்மைத் தன்மை தெரியாமல் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

78540cookie-checkதஞ்சையில் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவர்கள் அதிரடி கைது

Leave a Reply

error: Content is protected !!