மாநாடு 7 February 2026
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சோழனார்வயல் கிராமத்தில் வெறிநாய் ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றித் திரிந்துள்ளது. இந்த வெறிநாய் அந்த ஊரில் ஐந்து பேரை துரத்தி துரத்தி கடித்தது.


இதில், சோழகனார்வயல் கிராமத்தை சேர்ந்த வினோதா (வயது 31), திவ்யா நீலகண்டன் (வயது 30), கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த அன்வருதின் (வயது 50), வினோத் (வயது 28), ரெட்டவயல் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் (வயது 50) உள்ளிட்ட ஐந்து பேரை வெறிநாய் கடித்து படுகாயம் அடைந்த நிலையில், பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வெறிநாய் 10 க்கும் மேற்பட்ட கால்நடைகளை கடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கிராம பகுதிகளில் சுற்றித் திரியும் வெறி நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கழனிவாசல் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முகமது கனி
மற்றும் பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி – பேராவூரணி நீலகண்டன்
