Spread the love

மாநாடு 12 February 2026

கறம்பக்குடி அருகே முன்விரோதம் காரணமாக முதியோர் மீது கொலைவெறி தாக்குதல் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசன்


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஊரணிபுரம் சந்தப்பேட்டை எதிரில் வசிப்பவர் சொக்கலிங்கம் மகன் கணேசன், வயது 71 இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார் . இவரது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முதியவர் கணேசன், மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார் இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்னையா மகன் ரவி என்பவருக்கும் ரவி பொதுப் பாதையில் ஹோட்டல் கடை வியாபாரம் செய்து வருவதாகவும் இந்தப் பாதை வழியாக கணேசன் வீட்டிற்கு செல்லும்போது அடிக்கடி ரவி பிரச்சனை செய்வதாகவும் மேலும் ஹோட்டல் கழிவுகளை கணேசன், வீட்டின் முன்பு கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது இந்நிலையில் கணேசனுக்கும் ரவிக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது சம்பவத்தன்று கணேசன் தனது வீட்டிற்கு சென்றபோது தகாத கெட்ட வார்த்தையால் கணேசனை சின்னையா மகன் ரவி திட்டியதாக கூறப்படுகிறது கணேசன் தனது வீட்டிற்குள் சென்றுள்ளார் பிறகு ரவி மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி, வயது 46 மகன் சந்தோஷ் வயது 22 ஆகியோர் கணேசன் வீட்டுக்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கணேசனை பயங்கரமாக தாக்கியுள்ளனர் இதில் மயக்கம் அடைந்த கணேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் கணேசனிடம் கரம்பக்குடி போலீசார் புகாரை பெற்று இது குறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர், ஊரணிபுரத்தில் தனியாக வசித்து வந்த முதியவர் கணேசனை 3 பேர் சேர்ந்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது,

89800cookie-checkமுதியவர் மீது தாக்குதல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

Leave a Reply

error: Content is protected !!