Spread the love

மாநாடு 21 March 2026

பேராவூரணி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில், மொத்தம் ரூபாய், 2 லட்சத்து 5 ஆயிரத்து 890 பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதி, வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே, பேராவூரணி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லாசர் ரத்தினசாமி தலைமையில், காவலர்கள் சரளாதேவி, பாகம்பிரியாள் அடங்கிய பறக்கும் படையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அசோக் லேலண்ட் வாகனத்தில் இருந்த, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா சவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (44) என்பவரிடம் கணக்கில் வராத ரூபாய் 1 லட்சத்து 37 ஆயிரத்து 940 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், பேராவூரணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணி மேற்பார்வையாளர் கருணைராஜ் தலைமையிலான காவலர்கள் வி.முத்துராமலிங்கம்.
எம்.சரவணன் அடங்கிய குழுவினர், செருவாவிடுதி வடக்கு பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபு என்பவரிடமிருந்து, கணக்கில் வராத ரூபாய் 67 ஆயிரத்து 950 பறிமுதல் செய்து பேராவூரணி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது தேர்தல் துணை வட்டாட்சியர் சுரேஷ், மண்டல துணை வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்

90270cookie-checkபறக்கும் படை வாகனச் சோதனையில் ரூபாய் 2 லட்சத்து 5 ஆயிரம் பறிமுதல்

Leave a Reply

error: Content is protected !!