மாநாடு 15 February 2023
கரூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் 15 பேர் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் ஓரு ஆசிரியை உள்ளிட்டவர்கள் மாணவிகளை அழைத்துக் கொண்டு கரூருக்கு சென்று இருக்கிறார்கள்.
கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளின் அணி வெற்றியை பறிகொடுத்திருக்கிறது, இதனை அடுத்து மாணவிகள் 15 பேரையும் அழைத்துக் கொண்டு மாயனூர் கதவனைப் பகுதியில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் செல்லாண்டி கோயில் துறைக்கு சென்று இருக்கிறார்கள்.
அந்தப் பகுதியில் சூழல், மற்றும் ஆழம் அதிகம் இருக்கும் என்று எச்சரிக்கை அறிவிப்பு பலகை இருப்பதாக கூறப்படுகிறது, இந்தப் பகுதியில் குளித்த மாணவிகளில் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். அழைத்துச் சென்ற ஆசிரியர்களும், மாணவிகளும் கூச்சலிட்டதை அடுத்து இளைஞர்களும், மீட்பு படையினரும் வந்து நீரில் மூழ்கிய மாணவிகளை தேடி சடலமாக மீட்டெடுத்து, பரிசலில் கரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
மரணம் அடைந்த மாணவிகளின் உடல் உடற்கூறாய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுருக்கிறது, மாணவிகளின் பெற்றோர்கள் வருவதற்கு முன்பே மாணவிகளின் உடலை உடற்கூறாய்வு செய்யப்பட்டதால் மாணவிகளின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மரணம் அடைந்த மாணவிகளின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்து இழப்பீட்டுத் தொகையாக தலா 2 லட்சம் வழங்க உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி தலைமை ஆசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் இப்ராஹிம், ஆசிரியை திலகவதி உள்ளிட்டவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இங்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பல ஆறுகளிலும் மணல்கள் தொடர்ந்து திருடப்படுவதாலும் , பல ஆறுகளிலும் ,பல ஊர்களிலும், எந்த ஆற்றில் எங்கு ஆழம் இருக்கும் என்பது தெரியாத நிலை தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்த நிகழ்வு தெரிந்ததால் நிவாரணம் கொடுக்க உத்தரவிட்டிருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து ஆற்றில் மணல் திருடுவதை தடுக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் படித்துறைகளில் தடுப்பு கம்பிகளை அமைக்க வேண்டும் . பிணமானதும் பணம் கொடுக்க உத்தரவிடும் தமிழக முதல்வர்,
பொறுமை காக்காமல் மணல் திருட்டை தடுப்பாரா? படித்துறைகளில் தடுப்பு கம்பிகளை அமைப்பாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.