மாநாடு 8 March 2022
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளில் ஒன்று கலப்புத் திருமணம் செய்வது இதன் மூலம் சாதிகள் மதங்கள் களையப்படும் என்பது அவர்கள் கூற்று. அப்படியாப்பட்ட திமுகவின் அமைச்சரவையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைசராகப் பதவி வகித்து வருபவர் சேகர் பாபு.இவரது மகள் ஜெயகல்யாணி காதல் திருமணம் செய்துகொண்டார். இதற்கு சில மாதங்களுக்கு முன்னே அமைச்சரின் மகளை தான் காதலிப்பதாகவும் அமைச்சர் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது இந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெய கல்யாணி காதலித்தவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தனக்கும் தனது கணவருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டுமென ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது :
நானும் என் கணவரும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வருகிறோம். இரண்டுபேரின் விருப்பத்தின்படி தற்போது திருமணம் செய்துகொண்டோம். எனவே எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரை யாரும் தொந்தரவவு செய்ய வேண்டாம். தமிழ் நாடு காவல்துறை எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.