Spread the love

மாநாடு 25 April 2022

சில மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவின் செயல்பாடுகள் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது அவரை திரும்பப் பெறவண்டும் என்று பல கட்சிகளும் அமைப்புகளும் போராட்டம் நடத்தியது இந்நிலையில் மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையிலான சட்டமசோதாவை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக வெளிநடப்பு செய்தது.

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று ஊட்டியில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரின் நடவடிக்கையை குறைக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்டமசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இதைத் தொடர்ந்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டுவந்தார். இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கே அனுப்பி வைக்கப்பட உள்ளது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி அதை ஆளுநருக்கே மாநில அரசு அனுப்பி வைக்கிறது.

32190cookie-checkதமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது பாஜக வெளிநடப்பு

Leave a Reply

error: Content is protected !!