மாநாடு 30 July 2022
ஒவ்வொரு குடி மக்களுக்கும், அத்தியாவசிய பொருளான தினந்தோறும் ஒவ்வொரு குடும்பமும் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிகாற்று உருளைக்கு மத்திய அரசு மானியத்தை உபயோகிப்பாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றது.அதன்படி கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்திய குடிமக்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் மானியத்தையும் அதன் விலை உயர்வையும் பார்ப்போம்: 2019-2020 ஆம் ஆண்டுகளில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியமாக கொடுத்த தொகை-Rs.24,172 கோடி ரூபாய்
2021-2022 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு சிலிண்டர் மானியத்திற்கு கொடுத்த தொகை 242 கோடி ரூபாய் மட்டுமே.
அதாவது இந்த 2021-2022 ஆம் ஆண்டில் மட்டுமே1 LPG சிலிண்டரின் விலையை 262 ரூபாய் உயர்த்தியிருக்கிறது.
மானியத்தை 24 ஆயிரம் கோடி ரூபாயை குறைத்திருக்கிறது மத்திய அரசு.
இந்த விலை உயர்வின் காரணமாக இந்தியாவில் 2021-2022 ஆம் ஆண்டில் நிதியாண்டில் ஒரே ஒரு சிலிண்டர் கூட வாங்காதவர்கள் எண்ணிக்கை- 2 கோடியே 11 லட்சம் குடும்பங்கள்.
தமிழ்நாட்டில் 11 லட்சத்து 88 ஆயிரம் குடும்பங்கள் ஒரு சிலிண்டர் கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிலை இப்படி இருக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 11 லட்சத்து 88 ஆயிரம் குடும்பங்கள் ஒரு சிலிண்டர் கூட வாங்க முடியாத நிலைமையில் தமிழ்நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியுமா? தெரிந்திருந்தால் இந்திய பிரதமர் மோடியை தமிழ்நாட்டிற்கு அழைத்து விளையாட்டுப் போட்டியை துவங்கி வைக்கும்படி பெருமிதத்தோடு வரவேற்பு கொடுத்து அடுத்த விளையாட்டு போட்டியையும் நடத்தும் வாய்ப்பை தமிழகத்திற்கே தர வேண்டும் என்று கோரிக்கை வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான அடிப்படை கோரிக்கைகளை ஏன் எங்குமே பிரதமரிடம் வைக்கவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.