Spread the love

மாநாடு 26 February 2022

மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று மாலை ஜூம் செயலி வாயிலாக உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் பிப்.22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றது.ஆனால், மக்கள் நீதி மய்யம்,அமமுக,நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் பெரும்பாலான இடங்களில் தோல்வியையே தழுவியது.

இந்நிலையில்,மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று மாலை ஜூம் செயலி வாயிலாக உரையாற்றுகிறார்.

நம்மவரின் நம்பிக்கையாளர்களுக்கு வணக்கம்.நம் தலைவர் அவர்கள் 26-02-2022 மாலை 06.00 மணிக்கு ஜூம் செயலி வாயிலாக தேர்தல்,தேர்தல் முடிவுகள் மற்றும் மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நம் மத்தியில் உரையாற்ற இருக்கிறார்.

இக்கூட்டத்தில் வேட்பாளர்கள்,தேர்தல் பொறுப்பாளர்கள்,மாநில, மண்டல,மாவட்டச் செயலாளர்கள்,மண்டல,மாவட்ட அமைப்பாளர்கள், பொருளாளர்கள்,அனைத்து பிற பொறுப்பாளர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஜூம் இணைப்பு கூட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும்,என்று தெரிவித்துள்ளார்.

21140cookie-checkகமலஹாசன் கட்சியின் அடுத்த கட்ட நகர்வை பற்றி இன்று மாலை தொண்டர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளார்

Leave a Reply

error: Content is protected !!