Spread the love

மாநாடு 29 March 2022

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி முனியலட்சுமி. இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட  கருத்து வேடுபாடு காரணமாக தனது 2 மகள், 1 மகனுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார் முனியலட்சுமி. இவரது 17 வயது மகள் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

முனியலட்சுமியின் மகள் தங்ககுமார், கண்ணன் ஆகிய இரண்டு நண்பர்களுடன் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை முனியலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகள், கடந்த சனி்க்கிழமை இரவு ஆண் நண்பர்களின் உதவியுடன் முனியலட்சுமியை  துடிதுடிக்க கொலை செய்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் முனியலட்சுமியின் மகள். இதனையடுத்து மகள் மற்றும் முனியலட்சுமியைக் கொலை செய்ய உதவியதாக அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

27630cookie-checkபெற்ற தாயை படுகொலை செய்த பாவி மகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!