Spread the love

மாநாடு 28 April 2022

சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரம் பகுதியை அடுத்த கண்ணியாம்பட்டியை சேர்ந்தவர் ஐம்பத்தி ஆறு வயது உடைய கந்தன் திமுக சார்பில் போட்டியிட்டு கடந்த முறை கோணசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

கந்தன் தற்சமயம் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்துள்ளார்.இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.

கந்தன் நடைப்பயிற்சியில் இருந்த போது சின்னப்பையன், மணிகண்டன் ஆகியோர் திடீரென வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இருவரும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கந்தனை வெட்டியுள்ளனர். இதைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்திருக்கின்றனர் இதனை பார்த்ததும் கொலையாளிகள் மின்னல் வேகத்தில் தப்பி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த கந்தனை அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேல் சிகிச்சைக்காக சீரகாபாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த எடப்பாடி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், ஆய்வாளர் ஆனந்தன் மற்றும்  கொங்கணாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, நிலத்தகராறு காரணமாக அவர்கள் கந்தனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்யப்பட்ட கந்தன் கொலையாளிகளின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

32660cookie-checkதிமுக முக்கிய பிரமுகர் வெட்டிக்கொலை பரபரப்பு

Leave a Reply

error: Content is protected !!