மாநாடு 7 March 2022
துபாயில் உள்ள பிர்தவுஸ் ஸ்டூடியோ-வுக்கு சென்ற இசைஞானி இளையராஜா அங்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானை சந்தித்துள்ளார்.
நேற்று இதனை தனது ட்விட்டரில் பதிவிட்ட ரஹ்மான் “மேஸ்ட்ரோ-வை வரவேற்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். எதிர்காலத்தில் எங்கள் குழுவுக்காக இசைஞானி இளையராஜா கம்போஸ் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முழுக்க முழுக்க பெண் இசை கலைஞர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பிர்தவுஸ் இசைக்குழுவில் இந்தியா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏ. ஆர். ரஹ்மானின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது குழுவுக்காக மியூசிக் டைரக்ட் செய்வாரா இளையராஜா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
https://twitter.com/arrahman/status/1500518964840919041?s=20&t=-7qF-bSdsG5mGy3N45za-w
231600cookie-checkஏ.ஆர்.ரகுமானை சந்தித்த இளையராஜா ரகுமான் குழுவினருடன் இசையமைப்பாரா