Spread the love

நீதிமன்றத்தால் கொளத்தூர்.மணி விடுவிக்கப்பட்டார்.

விடுதலை புலிகளை ஆதரித்து பேசிய வழக்கில் இருந்து..

விபரம் வருமாறு :
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி , தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரித்து பேசியதாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.


என்ன பேசினார்கள் என்றால் ஈழத்தில் சத்தம் இல்லாமல் ஒரு யுத்தம் நடத்தி நமது தமிழ் இனத்தையே அழித்துக்கொண்டுள்ளது சிங்கள பேரினவாதம் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கூட மருத்துவ மனையில், பள்ளிக்கூடங்கள் என்று ஒரு இடம் விடாமல் உலகத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் கொத்துகுண்டுகள் போட்டு படுக்கொலை செய்கிறது சிங்கள அரசு. பத்திரிகையாளர்களை கூட செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து நிறுத்தி விடுகிறார்கள் மீறி செய்தியை வெளிக்கொண்டு வந்தவர்களில் பலர் உயிரும் பறிக்கப்பட்டதையும், நமது தமிழ் மொழியை பேசியதால் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம் அக்கா, தங்கைகளை ,பாலியல் வன்புணர்வு செய்கிறான் சிங்களன் ,இது 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது ஆரம்ப காலத்தில் ஈழத்து காந்தி தந்தை செல்வா அவர்கள் அகிம்சை வழியில் போராடினார்கள் அந்த நேரத்தில் தான் தமிழர்களின் தொடைக்கறி இங்கு கிடைக்கும் என்று பொதுவெளியில் தொங்கவிட்டு கொக்கரித்தான், தமிழச்சிகளின் மானம் பறிக்கப்பட்டது,இதை எல்லாம் பார்த்து வெகுண்டு எழுந்த பிரபாகரன் சிங்களர்களுக்கு அவர்களின் மொழியிலேயே ஆயுதத்தால் பதில் சொன்னால் தான் புரியும் ஆயுதப்போராட்டம் நடத்தி தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து காத்து வருகிறார் அவருக்கு ஆதரவாக உலகத்தமிழர்கள் இருக்க வேண்டும் என்றும் நமது ஆற்று மணலை கொள்ளை அடித்து திங்கும், சாராயக்கடை, ஆலை நடத்தியும் அதற்கு ஆதரவாக இருக்கும் அய்யோக்கியர்களுக்கு துணையாக இருக்க போவதில்லை நமது தொப்புள் கொடி உறவுகளை தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அழிக்கும் சிங்களனிடம் இருந்து காத்து நிற்கும் தலைவர் பிரபாகரன் அவர்களை ஆதரிக்க வேண்டும்

அந்த இன அழிப்பை தடுக்க வேண்டிய இந்திய அரசு ஆயுதம் வழங்கி வருகிறது என்று பேசினார்களாம் அதற்கு அப்போது தமிழ் நாட்டை ஆண்ட தலைவர் கருணாநிதி அவர்களின் திமுக அரசு இந்த வழக்கை இவர்கள் மீது போட்டது.இந்த வழக்கு ஈரோடு மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நடைபெற்று வந்த இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தப்படாமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சாட்சிகளுடைய வாக்கு மூலங்களில் போதிய முகாந்திரம் இல்லை என்றும் குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் இருவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

8340cookie-checkவழக்கில் இருந்து கொளத்தூர்மணி விடுவிப்பு சீமான்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!