மீண்டும் சீனாவில் உருவாகிய நீயோ கோவ் வைரஸ்
கொரோனா பிறந்த இடத்திலிருந்து புதிதாக தோன்றிய வைரஸ் இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்தால் மூன்றில் ஒரு நபர் இறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம் இதைக் கூறிய சீன விஞ்ஞானிகளால் உலக நாடுகள் அதிர்ச்சி.
2019ஆம் ஆண்டு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மறக்க முடியாத ஆண்டாக உள்ளது. ஏனென்றால் உலகிற்கு தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வரும் கொரோனா முதன்முதலில் 2019ஆம் ஆண்டு தான் கண்டறியப்பட்டது.
அதன்படி 2019ஆம் ஆண்டு முதலில் சீன நாட்டில் கொரோனா கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலகமெங்கும் கொரோனா பாதிப்பு பரவியது.அதிலும் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாகவே காணப்பட்டது.
இந்தியாவின் சராசரி மக்களின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்தது இப்போது வரை தங்களது சொந்தங்களை இழந்த தங்களது தொழில்களை இழந்த மக்களின் துயர் சொல்லிமாலாது.இப்போதுதான் இந்த கொடிய கொரானா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்ற செய்தியைக்கேட்டு அனைவருமே நிம்மதிப்பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த சூழலில் மற்றுமொரு புதிய கொரோனா வைரஸை சீனா விஞ்ஞானிகள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இவை உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
NeoCov என்ற புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சீனாவின் வூகான் நகர விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த NeoCov என்ற வைரஸ் அதிகமாக பரவும் வேகம் கொண்டது என்றும் அதிக உயிரிழப்பு விகிதத்தை கொண்டிருக்கும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
ஏற்கனவே சீனா மீது உலக நாடுகள் அதிருப்தியில் உள்ள நிலையில் சீன விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சீனாவின் வூகான் நகரில்தான் 2019ஆம் ஆண்டு covid-19 முதலில் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.