மாநாடு 4 March 2025
லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தும் சோதனையில் பல அரசு அதிகாரிகள் மாட்டி லஞ்சம் வாங்குவதில் சாதனை படைத்து வருவதை மாநாடு செய்தி குழுமமும் பல செய்தி நிறுவனங்களும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ஆனால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு கொஞ்சமும் பயமில்லை என்பதையே லஞ்சம் வாங்கி பிடி பட்டு சிறை சென்று கம்பியென்னும் கணவான்களின் செய்திகள் சாமானியர்களுக்கு தெரிவிக்கிறது அதன்படி நேற்று தூத்துக்குடி , விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றிருக்கிறது அதில் லட்சக்கணக்கில் பணமும் கைப்பற்ற பட்டு சார் பதிவாளரிடம் விசாரணை நடைபெற்றிருக்கிறது அதன் விவரம் பின் வருமாறு.
விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணிவரை சோதனை நடத்தி கணக்கில் வராத 2,14000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர் சார் பதிவாளரை வாகனத்தில் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் பண பரிமாற்றம் அதிகளவு நடைபெறுவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது முகூர்த்த நாளான நேற்று காலை முதல் தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு தீவிரமாக நடைபெற்று வந்தது. மாலை அலுவலகம் அருகே மறைமுகமாக நோட்டமிட்டிருந்த விழுப்புரம் (பொறுப்பு) லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் 2 வாகனங்களில் மாலை 5 மணி அளவில் திடீரென சார் பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே நுழைந்துள்ளனர் . இதையடுத்து அலுவலகத்தில் இருந்த பொதுமக்களை வெளியே அனுப்பிவிட்டு சார் பதிவாளர் சூர்யா மற்றும் அலுவலக ஊழியர்களை மட்டும் அலுவலகத்தில் வைத்து அலுவலக கதவுகளை மூடிவிட்டு சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. மேலும் அலுவலகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கணக்கில் வராத 2,14,120 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இரவு 10 மணி வரை இந்த சோதனை நடந்திருக்கிறது . சார் பதிவாளர் சூர்யாவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தங்கள் வாகனத்தில் அழைத்துச்சென்றும் விசாரணை நடத்தியதாக தெரிய வருகிறது .
It?¦s really a nice and useful piece of info. I?¦m glad that you simply shared this helpful info with us. Please keep us up to date like this. Thanks for sharing.
Very interesting subject , thankyou for putting up.