மாநாடு 10 July 2023
நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் 58 வயதுடைய மீன் வியாபாரி சேகர் இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சுற்றுவட்டாரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் மீன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்துவிட்டு தென்னமநாடு பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் . இதனை நோட்டமிட்ட தென்னமநாடு பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் 35 மதிக்கத்தக்க இளையராஜா என்பவர் மீன் வியாபாரி சேகரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்று செல்லம்பட்டியில் ஒருவரிடம் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி தனது ஆதார் அட்டையை கொடுத்து இந்த இருசக்கர வாகனத்தை அடகு வைத்துக்கொண்டு எனக்கு பணம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
அதன் பிறகு கொத்தனார் இளையராஜா கொண்டு சென்ற இருசக்கர வாகனத்தை பணம் கொடுத்த நபரிடமே கொடுத்து விட்டு வந்திருக்கிறார் அந்த வாகனத்தை எடுத்துக் கொண்டு நேற்று ஒரத்தநாடு பெட்ரோல் பங்க் அருகில் அந்த நபர் சென்று கொண்டிருந்தபோது தனது வாகனத்தை கண்ட மீன் வியாபாரி சேகர் துரித கதியில் தனது வாகனத்தை ஓட்டிச் சென்றவரை வாகனத்தோடு மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் தென்னமநாடு ஊரை சேர்ந்த இளையராஜா தன்னிடம் 4000 ரூபாய் வாங்கிக் கொண்டு இந்த வாகனத்தை அடகு வைத்து விட்டு சென்றதை கூறியிருக்கிறார் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மீன் வியாபாரி சேகர் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார் அதன் அடிப்படையில் காவலர்கள் தென்னமநாட்டைச் சேர்ந்த கொத்தனார் இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.