மாநாடு 09 February 2022
விவசாயிகள் தங்கள் நெல்களை விற்பதற்கு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்ததற்கு அனைத்து விவசாய சங்கங்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் இதனையடத்து தமிழ் தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன் அவர்கள் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பாக அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து நகல் எரிக்கும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தார்கள் அதன்படி இன்று காலை 11.05மணிக்கு தஞ்சாவூர் நகர தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட G.k.மூப்பனார் சாலை ஆயுதப்படை காவலர் குடியிருப்பு நுழைவாயில் முன்பிலிருந்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் பேரணியாக புறப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு இணையதளப் பதிவு அறிவிப்பு நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில் மருத்துவர்.பாரதி செல்வன், பொதுச்செயலாளர் தமிழர் தேசிய முன்னணி,
விடுதலைச்சுடர் தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ் தேசிய பேரியக்கம்,
நா.வைகரை தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் தமிழ் தேசிய பேரியக்கம்,
மணிமொழியன் பொருளாளர் காவிரி உரிமை மீட்புக் குழு,
பழ. ராஜேந்திரன் தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ் தேசிய பேரியக்கம்,
ஜெகதீசன் மாவட்ட செயலாளர் தமிழக விவசாயிகள் சங்கம்,
சிமியோன் சேவியர் ராஜ் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஐஜேகே,
ராமசாமி தஞ்சாவூர் நகர செயலாளர் தமிழ் தேசிய பேரியக்கம்,
தென்னவன் பூதலூர் ஒன்றிய செயலாளர் தமிழ் தேசிய பேரியக்கம்,
பிரபு மதி உறுப்பினர் தமிழ் தேசிய பேரியக்கம்,தீந்தமிழன் கும்பகோணம் ஒன்றிய செயலாளர்,
ரமேஷ் உறுப்பினர் காவிரி உரிமை மீட்புக் குழு ஆகியோருடன் 2 பெண்கள் உட்பட75 நபர்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் நகலை எரித்த போது காவல்துறையினர் தடுத்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தார்கள்.