மாநாடு 9 April 2022
எங்கு பஞ்சம் வந்தாலும் தஞ்சமென்று இங்கு வந்து விடுவார்களாம். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட புண்ணிய பூமி எங்கள் தஞ்சாவூர்.
தமிழர்களுக்கு என்று தரணியெங்கும் தனிச் சிறப்புகள் இருந்தாலும் கூட தஞ்சாவூர் தமிழர்களின் பூர்வீக ஊர் என்பதற்கு எங்களுக்கென்று இருப்பது இரண்டு ஆதார அடையாளங்கள் தான் இவ்வாறாக திகழ்வதில் ஒன்று கரிகால் சோழன் கட்டிய கல்லணை, மற்றொன்று எங்கள் ராசராச சோழன் கட்டிய பெருவுடையார் திருக்கோயிலும் தான்.
வந்தவர்கள் எல்லாம் வரலாற்றுச் சுவடுகளை பதித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் உலகையே ஆண்ட எங்கள் பாட்டன் சோழனின் அரண்மனை இருந்ததற்கான அடையாளங்கள் கூட எங்களுக்கு தெரியவில்லை. இன்றைக்கு இருக்கின்ற மக்களாட்சி முறையை அன்றே உலகிற்கு குடவோலை முறை என்ற திட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்திய மாமன்னன் இராசராசன்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நைல் நதியில் குறுக்கே அணைகள் கட்டி நீரைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு தோல்வியுற்று இருந்த அதே சமகாலத்தில் ஓடுகிற தண்ணீரை தேக்கி நிறுத்தி பாசனத்துக்கு பயன்படுத்தி வெள்ளாமை செய்து பசி பஞ்சத்தை இல்லாமல் செய்யலாம் என்று உலகுக்கே உணர்த்திய எங்கள் பெரும் பாட்டன் கரிகால் சோழனின் அடையாளங்களும் அறிய முடியவில்லை எங்களால்.
இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் தஞ்சாவூர் எங்க ஊர் என்று சொல்வதற்கு ஆதாரமாகவும் தமிழர்களின் தலைநிமிர்வுக்கு அடையாளமாகவும் இருப்பது பெருவுடையார் திருக்கோயில்.
இந்தப் பெரிய கோயிலின் புகழை அவ்வப்போது சிலர் மறைப்பதை கண்டு சென்று விட மனமில்லாமல் எந்தெந்த வழிகளில் எல்லாம் எங்களின் இருப்பை நாங்கள் தற்காத்துக்கொள்ள வேண்டுமோ அப்படி தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.
அதன்படி தான் கடந்த 2017 ஆம் ஆண்டு பெயர் பலகை பெயரில் பிரச்சினை எழுந்தபோதும், இப்போது 2022 ஆம் ஆண்டு பெயர் பலகையில் பிரச்சனை வந்தபோதும் சம்பந்தப்பட்டவர்களிடம் செய்திகளின் வழியாகவும் கொண்டு சேர்த்து தீர்வு கண்டிருக்கிறோம். பெயர் பலகை மின் விளக்கு இல்லாமல் இருண்டு கிடந்தது.
தஞ்சையில் சித்திரைத் திருவிழா நடப்பதற்கு அர்த்தமே இல்லாதது போல ஈன்ற கன்றுக்கு பால் கொடுக்க இயலாத பசுவைப் போல கலை இழந்து இருந்தது. அந்தப் பெயர் பலகை அதை சுட்டிக்காட்டும் விதமாக நமது மாநாடு இதழ் மூலம் ஏப்ரல் 3ந் தேதி செய்தி வெளியிட்டு இருந்தோம்.
பெரியகோயிலின் 18 நாள் சித்திரைத் திருவிழாவானது வருகிற 13ஆம் தேதி தேரோட்டத்தோடு இனிதே நிறைவடைய இருக்கிறது.சாதாரண நாட்களிலேயே வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், கோயிலைக் காண திரளான மக்கள் வருவார்கள். இப்போது திருவிழா என்கிற போது இன்னும் கூட்டம் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது .இவ்வாறான நிலையில் செய்தியை வெளியிட்டிருந்தும் திருவிழா நேரத்தில் நிர்வாகம் கவனத்தில் கொண்டு சரி செய்யாமல் இருந்ததால்.
நமது தீவினை அகற்று வலையொலியில் ஏப்ரல் 5ந் தேதி நானே பேசி காணொளியும் பதிவிட்டிருந்தேன்.இதனையும் கருத்தில் கொண்டு
தக்க நேரத்தில் பெயர்ப் பலகையை ஒளிர விட்டு தஞ்சையின் பெருமையை மிளிர செய்த கோயில் நிர்வாகத்தையும், அத்தனை அதிகாரிகளையும் மாநாடு இதழ் மனதார பாராட்டி நன்றி கூறி வாழ்த்துகிறது.
நமது இதழ் வெளியிட்டுள்ள செய்தியையும்,காணொளியையும் கீழே உள்ள லிங்கை தொட்டு படிக்கலாம், பார்க்கலாம்.
ஏப்ரல் 3ந் தேதி செய்தி :
https://maanaadu.in/periyakoil/
ஏப்ரல் 5ந் தேதி காணொளி: