மாநாடு 25 April 2022
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக ஒரு வீடு கட்டப்பட்டுள்ளது அந்த வீட்டின் சுற்று சுவரின் முகப்பு பகுதியில் மேதகு.வே. பிரபாகரன் அவர்களின் படமும் அவர் படையில் இருந்த தளபதிகளின் பாடங்களும் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ளது.


அந்த வீட்டை கடந்து செல்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு நிமிடமாவது நின்று பார்த்து பிரமித்து செல்கிறார்கள். நாமும் அந்த வீட்டின் உரிமையாளரான சிவகுமார் என்பவரிடம் ஏன் தமிழ்நாட்டில் எவ்வளவோ தலைவர்கள் இருக்கும் போது பிரபாகரன் படத்தை வீட்டின் வெளியே இவ்வளவு பெரியதாக வரைவதற்கான காரணம் என்ன என்று கேட்டோம் அதற்கு அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சாதிகளின் உரிமையை பேசுவதற்காகவும், சமத்துவ நிலைப்பாடுகளை பெறுவதற்காகவும், பாலின ஏற்றத்தாழ்வுகளை பேசுவதற்கும் பல தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். இப்போதும் கூட இருக்கிறார்கள். என்பது உண்மைதான் ஆனால் அவர்களுக்கு ஒரு அமைப்போ, வேறு தலைவர்களோ ,பெரும் மக்கள் கூட்டமோ துணையாக நிற்கும், நின்றிருக்கிறது என்பது வரலாறு.
ஆனால் தனி ஒரு மனிதனாக வீதியில் இறங்கி நீதி கேட்கத் தொடங்கி தமிழினம் என்கிற மாபெரும் தமிழ்தேசிய இனத்திற்கு விடுதலை வேண்டும் விலை தலையே ஆனாலும் பரவாயில்லை என்று சிந்தித்து செயல்படுத்தி உலகுக்கே உதாரணமாக நிற்கும் ஒப்பற்ற தமிழினத்தின் தலைவர் நான் பெரிதாக மதிக்கும் தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் மட்டும்தான்.அவருக்கு உள்ளத்தில் மட்டுமல்ல எனது இல்லத்திலும் இடம் உண்டு என்பதை எனது அன்பை எடுத்துக்காட்டும் விதமாக இவ்வாறு படம் வரைந்துள்ளேன் என்றார்.
அந்தத் தெருவின் நுழைவு பகுதியில் அந்த தெருவில் உள்ள கழிவு நீர்களை வெளியேற்றும் கழிவுநீர் வடிகாலான சாக்கடை இருக்கிறது.

அதில் நெகிழி என்கிற பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துக் கொண்டு இருக்கிறது இதனால் கழிவுநீர் தேங்கி நிற்கும் சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது இதனை உடனடியாக சுத்தம் செய்து நோய் பரவலை தடுக்க வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் கடமை ஆகும். இலங்கையில் பொருளாதார தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது இதற்கு காரணம் அவரின் நேர்மையும், திறமையும்மற்ற நிர்வாகக் குறைபாடு தான் என்று தற்போது தலைவராக உள்ள மகிந்த ராஜபக்சேவை தலைவர் பதவியிலிருந்து விலகச் சொல்லி ஏறத்தாழ ஒரு மாத காலமாக மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதும் , பிரபாகரன் என்கிற ஒரு தலைவனை உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
